இன்று கடைசி டி20 போட்டி: தொடரை கைப்பற்றுமா இந்தியா? 

இந்தியா – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது.
 | 

இன்று கடைசி டி20 போட்டி: தொடரை கைப்பற்றுமா இந்தியா? 

இந்தியா – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது.

மூன்று டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி, முதலில் டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில், தர்மசாலாவில் நடைபெறவிருந்த முதல் டி20 போட்டி மழையால் ஒரு பந்துகூட வீசாமல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, மொகாலியில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் இந்த தொடரில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று மூன்றாவது டி20 போட்டி நடைபெறுகிறது. இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

இரண்டாவது டி20 போட்டியில் கோலியின் அருமையான ஆட்டத்தாலும், கடைசி கட்டத்தில் இந்திய பவுலர்களின் அருமையான பந்துவீச்சாலும் இந்தியா வெற்றி பெற்றது. அனுபவம் இல்லாதா இளம்வீரர்களை கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி, பலம் வாய்ந்த இந்திய அணியை வெற்றிக்கொள்ள இன்று அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டால் ஓழிய தொடரை சமன் செய்ய முடியும். அனைத்திலும் வெயிட்டாக உள்ள இந்திய அணியை பொறுத்தவரை தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடும் என்பதில் சந்தேகமில்லை.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP