கடைசி டி20 போட்டி: இந்தியா பவுலிங், அணியில் புதுவீரர் அறிமுகம்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3-ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
 | 

கயானாவில் மழை பெய்ததால் போட்டி தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டது. தற்போது, மழை நின்ற நிலையில், போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். புரோவிடன்ஸ் மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் போட்டி தொடங்கவுள்ளது. இந்திய அணியில் 20 வயதுடைய லெக் ஸ்பின்னர் ராகுல் சாஹர் அறிமுகமாகியுள்ளார்.

இரு அணி வீரர்கள் விவரம்: 

இந்தியா: தவான், லோகேஷ் ராகுல், கோலி (கேப்டன்), மணீஷ் பாண்டே, ரிஷாப் பண்ட், க்ருனால் பாண்ட்யா, ராகுல் சாஹர், புவனேஸ்வர் குமார், வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், நவ்தீப் சைனி, 

வெஸ்ட் இண்டீஸ்: சுனில் நைரேன், லீவிஸ், பூரான், ஹெட்மேயர், பொல்லார்ட், ரோவ்மன் பவல், பிரத்வெயிட் (கேப்டன்),கீமோ பால், ஆலென், காட்ரெல், தாமஸ்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP