ஆரம்பத்தில் அடிச்ச அடிக்கு 350 ரன்களுக்கு மேல் வரும் நினைச்சா, இந்தியா இவ்வளவுதான் அடிச்சது...

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணிக்கு 315 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 | 

ஆரம்பத்தில் அடிச்ச அடிக்கு 350 ரன்களுக்கு மேல் வரும் நினைச்சா, இந்தியா இவ்வளவுதான் அடிச்சது...

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணிக்கு 315 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல், ரோகித் களமிறங்கினார்கள். 

இவர்கள் நிதானமாக ஆடியதால் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 18.2 ஓவரில் 100 ரன்களை தொட்டது. மேலும், ரோகித் 45 பந்திலும், ராகுல் 58 பந்திலும் அரைசதம் அடித்தனர். 

இதையடுத்து, ரோகித் சர்மா 90 பந்தில் 5 சிக்ஸர் 6 பவுண்டரிகளுடன் சதம் அடித்தார். அத்துடன், உலகக்கோப்பையில் 4-வது சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்து, 4 சதமடித்த முன்னாள் இலங்கை வீரர் சங்ககாராவின் சாதனையையும் ரோகித் சமன் செய்தார். இதன்பின், ரோகித் 104 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சர்கார் பந்தில் அவுட் ஆனார். ரோகித், ராகுல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 180 ரன்கள் குவித்தது. அடுத்து கோலி வந்தார். ராகுல் 77 ரன்னில் ரூபல் பந்தில் அவுட் ஆனார். அடுத்து ரிஷாப் பண்ட் களமிறங்கினார்.

இந்தியா 34.5 ஓவரகளில் 200 ரன்களை தொட்டது. ரிஷாப் பண்ட் 94 மீட்டரில் சிக்ஸர் அடித்து, இந்தியா 200 ரன்கள் கடக்க உதவினார். நடப்பு உலகக்கோப்பையில் தொடர்ந்து 5 முறை அரைசதமடித்த கோலி, இந்த போட்டியில் 26 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். கோலியின் விக்கெட்டை வீழ்த்திய முஸ்தாஃபிகர், அதே ஓவரில் பாண்ட்யாவையும்  டக் அவுட் செய்து இந்திய ரசிகர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். 

ஆரம்பத்தில் அடிச்ச அடிக்கு 350 ரன்களுக்கு மேல் வரும் நினைச்சா, இந்தியா இவ்வளவுதான் அடிச்சது...

அடுத்து தோனி களமிறங்கினார். பண்ட் 48 ரன்களில் காலியானார். இதற்கடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 8 ரன்களில் பெவிலியன் திரும்ப, கடைசி ஓவரில் தோனியும் 35 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கடைசி நேரத்தில் வங்கதேச பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 314 ரன்கள் மட்டுமே எடுத்தது. 350 ரன்களுக்கு மேல் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகபட்சமாக ரோகித் 104, ராகுல் 77, பண்ட் 48 ரன்கள் எடுத்தனர். வங்கதேச அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய முஸ்தாஃபிகர், கோலி, பாண்ட்யா, தோனி, தினேஷ் கார்த்திக், ஷமி ஆகிய 5 பேரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP