‘இந்தி பேச தெரியாததால் இந்திய அணியில் தனிமையில் தவித்தேன்’

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் போது, இந்தி பேச தெரியாததால் தனிமையில் தவித்தேன் என்று கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நொந்து பேசியுள்ளார்.
 | 

திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கலந்து கொண்டார். 
அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டபோது விளையாட செல்லும் ஒவ்வொரு நாளும் அழுது கொண்டிருப்பேன். இந்தி எழுதவும், படிக்கவும் தெரிந்த எனக்கு பேச தெரியாது. இதனால் விளையாடும் போது பேசுவதற்கு ஆளிள்ளாமல் தனிமையில் தவித்தேன்’ என்று அஸ்வின் உருக்கத்துடன் தெரிவித்தார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP