புருஷன்  டக் - அவுட் ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன செய்வாங்க? சானியாவ

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரும், இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவின் கணவருமான சோகிப் மாலிக், முதல் பந்திலேயே "டக் -அவுட்" வெளியேறியது, பாகிஸ்தான் ரசிகர்களை அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைய செய்துள்ளது.
 | 

புருஷன்  டக் - அவுட் ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன செய்வாங்க? சானியாவையும் சாடும் பாக். கிரிக்கெட் வெறியர்கள்...

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது. குறிப்பாக அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரரும், இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவின் கணவருமான சோகிப் மாலிக், முதல் பந்திலேயே "டக் -அவுட்" ஆகி வெளியேறியது, பாகிஸ்தான் ரசிகர்களை அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைய செய்துள்ளது.

அவர்கள் தங்களது ட்விட்டர் பதிவுகளில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை திட்டித் தீர்த்து வருவதும் இல்லாமல், சோகிப் மாலிக்கின் மனைவியான சானியா மிர்ஸாவையும் வம்புக்கு இழுத்துள்ளனர்.

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முதல் நாள் இரவு, அதாவது சனிக்கிழமை இரவு (ஜூன் 15) சோகிப் மாலிக் - சானியா தம்பதி, தங்களது குழந்தையுடன், லண்டனில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் உணவருந்த சென்றுள்ளனர். அந்த விருந்தில் பாகிஸ்தான் அணி வீரர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிகழ்வை குறிப்பிட்டு, "இந்திய அணியுடனான முக்கியமான போட்டிக்கு முதல் நாள் இரவு  நன்றாக ஓய்வெடுக்காமல் இப்படி விருந்தில் பங்கேற்றால், உடல் அசதி ஏற்பட்டு ஆட்டத்தில் சிறப்பாக விளையாட முடியாது என உங்களுக்கு தெரியாதா? சோகிப் மாலிக்குடன் விருந்தில் பங்கேற்றதன் மூலம், இந்தியாவுடனான ஆட்டத்தில் அவர்  "டக் -அவுட்" ஆனதுக்கு நீங்கள் காரணமாகிவிட்டீர்கள்" என, பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் (வெறியர்) ஒருவர், தமது ட்விட்டர்  பக்கத்தில்  குற்றம்சாட்டியுள்ளார்.

"பாகிஸ்தான் கிரிக்கெட் அணியிலிருந்து சோகிப் மாலிக் விரைவில் நீக்கப்படுவார். அப்போது, நீங்களும், அவரும் தாராளமாக இரவு விருந்துக்கு (டின்னர்) செல்லுங்கள்... யாரும் கவலைப்படமாட்டார்கள்" என மற்றொரு ரசிகர் கடுமையாக சாடியுள்ளார்.


தன் மீதான இதுபோன்ற பல்வேறு விமர்சனங்களுக்கு சானியா மிர்ஸா, ட்விட்டரில் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர், ", ஹோட்டலில் நாங்கள் உணவருந்தும் காட்சியை, எங்களின் அனுமதியின்றி வீடியோ எடுத்து வெளியிட்டுள்ள முட்டாள்களே... ஹோட்டலுக்கு சென்று, குடும்பத்துடன் உணவருந்த கூட எங்களுக்கு தனியுரிமை (Privacy) இல்லையா? மேட்ச்சில் தோற்றால், உணவுகூட உட்கொள்ளக்கூடாதா என்ன?" என்று சானியா காட்டமாக  பதில் தந்துள்ளார்.


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP