உலக கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது ஜெர்மனி

ஒடிசாவில் உலககோப்பை ஹாக்கி போட்டியில், பாகிஸ்தான் அணியை 1 - 0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. மற்றொரு ஆட்டத்தில் 7-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது.
 | 

உலக கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது ஜெர்மனி

ஒடிசாவில் நடைபெற்றுவரும் உலககோப்பை ஹாக்கி போட்டியில், பாகிஸ்தான் அணியை 1 - 0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. 

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கலிங்கா ஸ்டேடியத்தில் 14-வது உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி கடந்த 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், டி-பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தானும், ஜெர்மனியும் மோதின.

இரு அணி வீரர்களும் ஆட்டத்தின் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வந்தனர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணியும் கோல் ஏதும் அடிக்கவில்லை. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 36வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் மார்கோ மில்ட்காவ் சாதுர்யமாக ஒரு கோல் அடித்தார். அதன் பின்னர் பாகிஸ்தான் கோல் ஏதும் அடிக்காததால், ஜெர்மனி அணி பாகிஸ்தான் அணியை 1 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 

உலக கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது ஜெர்மனி

மற்றொரு லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தும், மலோசியாவும் மோதின. ஆட்டத்தின் தொடக்கம் முதலே மலேசியா அணி சோர்வுடனேயே காணப்பட்டது. இதனால் நெதர்லாந்து வீரர்களான ஹெர்ட்ஸ்பெர்கர் 3 கோல்களும், புரூசர் மைக்ரோ, வீர்டென் மின்க், கேம்பர்மேன் ராபர்ட், பிரிக்மேன் தீரி ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். இறுதி வரை மலோசியா கோல் ஏதும் போடாத காரணத்தால், 7-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணி மிக எளிதாக வெற்றி பெற்றது. 

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றவுள்ள ஆட்டத்தில், இந்தியா, பெல்ஜியத்துடனும், கனடா, ரஷ்யாவுடனும் மோதுகின்றன. 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP