உலக கோப்பை தோல்விக்கு நடுவர் காரணமா? ஹாக்கி அணி காட்டம்

ஹாக்கி உலகக் கோப்பையில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்த நிலையில், நடுவர் செய்த தவறான முடிவுகளே இந்த தோல்வி காரணமாக இந்திய அணி குற்றம்சாட்டியுள்ளது.
 | 

உலக கோப்பை தோல்விக்கு நடுவர் காரணமா? ஹாக்கி அணி காட்டம்

ஹாக்கி உலகக் கோப்பையில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்த நிலையில், நடுவர் செய்த தவறான முடிவுகளே இந்த தோல்வி காரணமாக இந்திய அணி குற்றம்சாட்டியுள்ளது.

நேற்று நடைபெற்ற ஹாக்கி உலகக் கோப்பை காலிறுதி போட்டியில், இந்தியா நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் நெதர்லாந்து இந்தியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதுகுறித்து பேசியபோது நடுவரின் தவறான முடிவுகளாலேயே இந்த போட்டியில் இந்தியா தோற்றதாக இந்திய அணி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

போட்டியின் கடைசி நிமிடங்களில் இந்திய வீரர் அமித் ரோஹிததாஸுக்கு வழங்கப்பட்ட மஞ்சள் கார்டு குறித்தே இந்திய அணி வீரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். போட்டியின்போது, நெதர்லாந்து அடித்த ஒரு கோலை நடுவர் வழங்கிய நிலையில், அதை இந்திய அணி ரிவியூ செய்ய, கோல் இல்லை என தெரிய வந்தது. பின்னர் அது ரத்து செய்யப்பட்டது.

இந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் நரேந்திர சிங், "முதலில் இந்திய ஹாக்கி ரசிகர்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம். அவர்களுக்கு வழங்க வேண்டிய வெற்றியை எங்களால் கொடுக்க முடியவில்லை. ஆனால் இதை மிகவும் எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். நடுவர்கள் தரப்பில் முன்னேற்றம் ஏற்படுத்தாவிட்டால், இதுபோன்ற மோசமான முடிவுகளை நாம் தொடர்ந்து பார்க்க வேண்டியதாக இருக்கும். இரண்டு பெரிய கோப்பைகளை இந்த ஆண்டு நடுவர்களின் தவறுகளால் இந்தியா இழந்து உள்ளது" என்று கூறினார்.

தோல்வி குறித்து பேசிய இந்திய கேப்டன் மன்பிரீத் சிங் "இரண்டு பெரிய கோப்பைகளை நடுவார்களால தோற்றுள்ளோம். ஆனால், இன்னும் மக்கள் இந்திய ஹாக்கி அணி முன்னேறாமல் இருப்பதாகவும் தோற்றதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர்" என்று கூறினார்.

இந்திய அணி நடுவர் மீது அதிகாரப்பூர்வமாக புகார் அளித்துள்ளதா என கேட்டதற்கு இல்லை என கேப்டன் நரேந்திர சிங் பதிலளித்தார். "இப்பொழுது நாங்கள் புகார் அளித்து என்ன புண்ணியம்? போட்டி ஏற்கனவே முடிந்தாகிவிட்டது. தோல்வியை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், ஹாக்கி பெடரேஷன், சில பகுதிகளில் முன்னேற்றம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. கூட்டமைப்பு, வீரர்கள், பயிற்சியாளர்கள் தங்களின் நேரத்தையும், உழைப்பையும் செலவழித்து ஒரு தொடருக்காக கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால் 4-6 வருடங்கள் கஷ்டப்பட்டு உழைத்த உழைப்பை, ஒரே ஒரு தவறான முடிவால் சில நடுவர்கள் கெடுத்து விடுகிறார்கள்" என்றும் கூறினார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP