உலககோப்பை ஹாக்கி: அர்ஜெண்டினாவை வீழ்த்தியது பிரான்ஸ்; ஸ்பெயின்-நியூசிலாந்து டிரா

ஒடிசாவில் நேற்று நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் அர்ஜெண்டினா அணியை 5 -3 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. ஸ்பெயின் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது
 | 

உலககோப்பை ஹாக்கி: அர்ஜெண்டினாவை வீழ்த்தியது பிரான்ஸ்; ஸ்பெயின்-நியூசி

ஒடிசாவில் நேற்று நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் அர்ஜெண்டினா அணியை 5 -3 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. 

14-வது உலக கோப்பை ஹாக்கிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பிரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா அணிகள் நேற்று மோதின. ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஹுயூகோ ஜெனஸ்டெட் ஒரு கோல் அடித்தார். 23-வது நிமிடத்தில் விக்டர் சார்லட் ஒரு கோலும், 26-வது நிமிடத்தில் அரிஸ்டைட் காய்ஸ்னி ஒரு கோலும் அடித்தனர். இதனால் பிரான்ஸ் அணி 3-0 என முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் லூகஸ் மார்டினஸ் ஒரு கோலும், 30-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் காஸ்பர்டு பாம்கார்டன் ஒரு கோலும் அடித்தனர். 

இறுதியில், அர்ஜெண்டினா அணியை 5- 3 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வீழ்த்தியது. இப்போட்டியில் அர்ஜெண்டினா தோற்றாலும் புள்ளிப்பட்டியலில் ஏ பிரிவில் முதலிடம் வகிக்கிறது. 

மற்றொரு ஆட்டத்தில், ஸ்பெயின் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது. இதையடுத்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்த ஸ்பெயின் அணி போட்டியை விட்டு வெளியேறியது.

இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் ஆட்டத்தில், ஆஸ்திரேலியா-சீனா, அயர்லாந்து-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. சி பிரிவில் முன்னிலையில் உள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் கனடாவை நாளை (டிச.8) எதிர்கொள்கிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP