ரோகித் சாதனையை முறியடித்த கோலி, அதே சாதனையை ரோகித் இன்று முறியடிப்பாரா?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய டி20 போட்டியில், கோலியின் சாதனையை முறியடிக்க, ரோகித் சர்மாவுக்கு இன்னும் 8 ரன்களே தேவைப்படுகிறது.
 | 

ரோகித் சாதனையை முறியடித்த கோலி, அதே சாதனையை ரோகித் இன்று முறியடிப்பாரா?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய டி20 போட்டியில், கோலியின் சாதனையை முறியடிக்க, ரோகித் சர்மாவுக்கு இன்னும் 8 ரன்களே தேவைப்படுகிறது.

டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் முதல் இடத்தில் இருந்த ரோகித் சர்மாவின் சாதனையை, தென்னாப்பிரிக்கவுக்கு எதிரான கடந்த போட்டியில் முறியடித்து கோலி முதலிடம் பிடித்தார். மேலும், 25 பந்துகளில் 72 ரன்கள் (ஆட்டமிழக்காமல்) எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார். 

தற்போது டி20 போட்டியில் 71 ஆட்டங்களில் விளையாடி 2441 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருக்கும் கோலி, நம்பமுடியாத வகையில் 50.85 என்ற கணக்கில் சராசரி வைத்துள்ளார். 22 அரை சதங்கள் அடித்துள்ளார். அதிகபட்ச ரன்கள் 90. ரோகித் சர்மா 97 ஆட்டங்களில் 2434 ரன்கள் எடுத்து, 32.34 சராசரியாக வைத்துள்ளார். இதில், 4 சதங்கள், 17 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்ச ரன்கள் 118.

இந்த நிலையில், கோலியின் சாதனையை முறியடிக்க ரோகித் சர்மாவுக்கு இன்னும் 8 ரன்களே தேவைப்படுகிறது. பெங்களூருவில் இன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக  நடைபெறும் போட்டியில், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் ரோகித், அந்த சாதனையை முறியடித்துவிடுவார் என்றே எதிர்பார்க்கலாம்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP