இன்று முதல் டி20 போட்டி: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதல்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் இன்று நடைபெறுகிறது.
 | 

இன்று முதல் டி20 போட்டி: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதல்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் இன்று நடைபெறுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதல் 2 டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில்லில் நடைபெறுகிறது. எஞ்சிய ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது.

உலகக்கோப்பை தொடரில் அரையிறுதியுடன் வெளியேறிய இந்திய அணி, விளையாடும் முதல் போட்டி இதுவாகும். இந்த தொடரில் தோனிக்கு அவரது விருப்பத்தில் பேரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், கீப்பராக இருக்கும் ரிஷாப் பண்ட் அதிக பொறுப்புடன் விளையாட வேண்டிய நிர்பந்தத்தில் தள்ளப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டயா காயம் காரணமாக விளையாடவில்லை. பும்ரா டெஸ்ட் தொடரில் மட்டும் பங்கேற்பார். உலகக்கோப்பையில் இடம்பெறாத ஸ்ரேயாஸ் அய்யர், மணீஷ் பாண்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பொல்லார்ட், சுனில் நைரேன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலமடைய செய்வதற்காக, அங்கு 2 டி20 போட்டிகள் நடத்தப்படவுள்ளது. லாடெர்ஹில்லில் இரு அணிகளும் ஏற்கனவே கடந்த 2016-ஆம் ஆண்டில் ஒரு டி20 போட்டி விளையாடியுள்ளது. இதில், இந்தியா 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP