முதல் நாள் ஆட்டம் முடிந்தது: 50ஆவது டெஸ்டில் கோலி 50

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிள் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்துள்ளது.
 | 

புனேயில் நடைபெற்று வரும் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, மயங்க் அகர்வால் களமிறங்கினார்கள். ரோகித் 14 ரன்களில் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  

புஜாரா களமிறங்கினார். தொடர்ந்து நன்றாக ஆடி அகர்வால் அரைசதம் அடித்தார். இவரை தொடர்ந்து புஜாராவும் அரைசதம் அடித்து 58 ரன்களில் ரபாடா பந்துவீச்சிலே இவரும் தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து., கோலி களமிறங்கினார். தேநீர் இடைவேளை வரை இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்துள்ளது.

இதையடுத்து, தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அகர்வால் 184 பந்துகளில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். இந்த தொடரில் அகர்வால் அடிக்கும் இரண்டாவது சதம் இதுவாகும். முதல் டெஸ்டில் இரட்டை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சதமடித்த சிறிது நேரத்திலேயே அகர்வால் 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

முதல் நாள் ஆட்டம் முடிந்தது: 50ஆவது டெஸ்டில் கோலி 50

இதன்பிறகு, களமிறங்கிய ரஹானேவுடன் சேர்ந்து சிறப்பாக ஆடிய கோலி அரைசதம் அடித்தார். பின்னர், 85.1 ஓவர்களில் முதல் நாள் ஆட்டம் முடிந்தது. இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 63 ரன்களுடனும், ரஹானே 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் ரபாடா மூன்று விக்கெட்டுகளை சாய்த்தார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP