முதல் ஒரு நாள்போட்டி: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி கயானாவில் இன்று நடைபெறுகிறது.
 | 

முதல் ஒரு நாள்போட்டி: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி கயானாவில் இன்று நடைபெறுகிறது.

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், மூன்றிலும் வென்று வெஸ்ட் இண்டீசை வயிட் வாஷ் செய்தது. 

இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் போட்டிகள் நடக்கவுள்ளது. இதில் முதல் ஒரு நாள் போட்டி கயானாவில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

டி20 தொடரில் சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் தொடரிலும் இதேபோல் செயல்படுவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது. டி20-யில் சோபிக்காத தவான் ஒருநாள் போட்டியில் நன்கு விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம். இந்திய அணியில் தலைவலியாக இருக்கும் 4-வது இடத்தில், ராகுல் இறங்கவே அதிக வாய்ப்புள்ளது. கடைசி டி20 போட்டியில் வெளுத்து வாங்கிய ரிஷாப் பண்ட், ஒரு நாள் தொடரை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பவுலிங்கில் புவனேஸ்வர் குமார், ஷமி கலக்குவார்கள். ஒரு நாள் போட்டியில் நவ்தீப் சைனி அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடும் கெயில் இந்த தொடருடன் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வு பெறவுள்ளதால், அவரின் அதிரடி ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். பூரான், ஹெட்மேயர், ஹோப் உள்ளிட்ட இளம் வீரர்கள் பேட்டிங்கிலும், தாமஸ், காட்ரெல் பவுலிங்கிலும் இந்திய அணிக்கு சவாலாக இருப்பார்கள்.

இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP