ஸ்டெர்லிங் ஹாட்ரிக்; இங்கிலாந்து சூப்பர் வெற்றி!

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் யூரோ கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் துவங்கியுள்ள நிலையில், செக் குடியரசுடனான முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது.
 | 

சர்வதேச ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டிகள் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறுகின்றன. இதற்கான தகுதிச் சுற்று போட்டிகள், துவங்கியுள்ளன. இதில், நேற்று செக் குடியரசுடனான போட்டியில் இங்கிலாந்து மோதியது. ஆரம்பத்தில் இருந்தே இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி, பல வாய்ப்புகளை உருவாக்கியது. 24வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் ஸ்டெர்லிங் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். முதல் பாதி முடியும் போது, இங்கிலாந்து அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதில் கேப்டன் ஹேரி கேன் கோல் அடித்தார். 

இரண்டாவது பாதியிலும் இங்கிலாந்து தொடர்ந்து சிறப்பாக விளையாடியது. 62வது நிமிடத்தின் போது, ஸ்டெர்லிங் மீண்டும் ஒரு சூப்பர் கோல் அடித்தார். 68வது, நிமிடத்தில் ஸ்டெர்லிங் அடித்த ஷாட், எதிரணி வீரரின் மேல் பட்டு கோலுக்குள் சென்றது. ஆட்டம் முடியும் நேரத்தில், 84வது நிமிடத்தில் செக் வீரர் டாமஸ் களாஸ் செய்த தவறால், பந்து அவரது காலில் பட்டு கோலுக்குள் சென்றது. இதைத் தொடர்ந்து 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP