சாலா அதிரடி... முதலிடத்தில் தொடரும் லிவர்பூல்!

வுல்வர்ஹேம்ப்ட்டன் அணிக்கு எதிரான பிரீமியர் லீக் போட்டியில், லிவர்பூல் 2-0 என வெற்றி பெற்று பிரீமியர் லீக் பட்டியலில் தனது முதலிடத்தை தக்க வைத்துள்ளது . அதிரடி வீரர் சாலா சிறப்பாக விளையாடி ஒரு கோல் அடித்தார்.
 | 

சாலா அதிரடி... முதலிடத்தில் தொடரும் லிவர்பூல்!

வுல்வர்ஹேம்ப்ட்டன் அணிக்கு எதிரான பிரீமியர் லீக் போட்டியில், லிவர்பூல் 2-0 என வெற்றி பெற்று பிரீமியர் லீக் பட்டியலில் தனது முதலிடத்தை தக்க வைத்துள்ளது . அதிரடி வீரர் சாலா சிறப்பாக விளையாடி ஒரு கோல் அடித்தார்.  

இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், மான்செஸ்டர் சிட்டி மற்றும் லிவர்பூல் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. நடப்பு சாம்பியன்களான சிட்டி, இதுவரை ஒரே ஒரு போட்டியில் மற்றும் தோற்றுள்ளது.

அதேநேரம், லிவர்பூல் எந்த போட்டியிலும் தோற்காமல் சிட்டியை விட ஒரு புள்ளி அதிகம் பெற்று முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து ப்ரீமியர் கோப்பையை கடந்த 26 ஆண்டுகளில் லிவர்பூல் ஒருமுறை கூட வென்றதில்லை. அதனால், இந்தமுறை புதிய பயிற்சியாளர் ஜர்கன் க்ளாப் தலைமையில் கோப்பையை வெல்ல கடுமையாக போராடி வருகிறது. 

நேற்று வுல்வர்ஹேம்பட்டன் அணிக்கு எதிராக மோதிய லிவர்பூல், எதிர்பார்த்தது போலவே முழு ஆதிக்கம் செலுத்தியது. தொடர்ந்து அட்டாக் செய்து விளையாடிய அந்த அணி வீரர்கள், பலமுறை கோல் அடிக்க நெருங்கினர்.

18வது நிமிடத்தில், லிவர்பூலின்  நட்சத்திர வீரர் முஹம்மது சாலா, கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். இரண்டாவது பாதியில், சாலா கொடுத்த ஒரு சூப்பர் பாஸை, லிவர்பூலின் டிபென்ஸ் வீரர் வேன் டைக் கோலுக்குள் தள்ளி, 2-0 என வெற்றிபெற உதவினார்.

இந்த வெற்றியை தொடர்ந்து, லிவர்பூல் 4 புள்ளிகள் முன்னிலையுடன் முதலிடத்தில் உள்ளது.இன்று நடைபெறும் மற்றொரு போட்டியில், மான்செஸ்டர் சிட்டி, க்ரிஸ்ட்டல் பேலஸுடன் மோதுகிறது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP