பிரீமியர் லீக் மெகா மோதல்: ஆர்சனல் vs மான்செஸ்டர் சிட்டி!

உலகிலேயே அதிகம் பார்க்கப்படும் க்ளப் கால்பந்து தொடரான இங்கிலாந்து பிரீமியர் லீக் இரு தினங்களுக்கு முன் துவங்கியது. எதிர்ப்பார்த்தது போலவே மான்செஸ்டர் யுனைட்டட்,
 | 

பிரீமியர் லீக் மெகா மோதல்: ஆர்சனல் vs மான்செஸ்டர் சிட்டி!

உலகிலேயே அதிகம் பார்க்கப்படும் க்ளப் கால்பந்து தொடரான இங்கிலாந்து பிரீமியர் லீக் இரு தினங்களுக்கு முன் துவங்கியது.  எதிர்ப்பார்த்தது போலவே மான்செஸ்டர் யுனைட்டட், செல்சி,  டாட்டன்ஹேம் ஆகிய 3 பெரிய அணிகளும் தங்களுக்குண்டான போட்டிகளில் வெற்றி பெற்றன. இன்று நடைபெறும் ஒரு போட்டியில் லிவர்பூலுடன் வெஸ்ட் ஹாம் அணி மோதுகிறது. 

மற்றொரு போட்டியில், ஆர்சனலை நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி எதிர்கொள்கிறது. இந்த வாரத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டி இதுவே. கடந்த சீசனில், அனைத்து பிரீமியர் லீக் அணிகளையும் துவம்சம் செய்து, 100 புள்ளிகள் 106 கோல்கள் என பல சாதனைகளுடன் கோப்பையை கைப்பற்றியது மான்செஸ்டர் சிட்டி. இந்த சீஸனும் கோப்பையை வெல்லும் என அதிகம் பேர் எதிர்பார்ப்பது சிட்டி அணியை தான். பயிற்சியாளர் பெப் கார்டியோலா தலைமையில், டி ப்ருயின், சானே, ஸ்டெர்லிங், அகுவேரோ  உட்பட பல அட்டகாசமான வீரர்களை கொண்டிருந்த சிட்டி, இந்த சீசனுக்காக லெஸ்டர் அணியின் நட்சத்திர அட்டாக் வீரர் மாஹ்ரஸ்ஸை வாங்கி மேலும் தன்னை பலப்படுத்திக் கொண்டது. லண்டனில் உள்ள ஆர்சனல் மைதானத்தில் இந்த போட்டி நடந்தாலும், அதிரடியாக  விளையாடி வரும் சிட்டி, இந்த போட்டியை நிச்சயம் வெல்லும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.

22 ஆண்டுகளாக ஆர்சனல் அணியின் பயிற்சியாளராக இருந்த ஆர்சீன் வெங்கர், பல சர்ச்சைகளுக்கும், ரசிகர்களின் அதிருப்திகளுக்கும் இடையே, தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து, பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணியின் பயிற்சியாளர் உனாய் எமெரி, ஆர்சனலின் தலைமை பொறுப்பை ஏற்றார். வாலன்சியா, செவில்லா, பாரிஸ் போன்ற அணிகளில் பணியாற்றியுள்ள எமெரி, யூரோப்பா லீக், பிரென்ச் லீக், பிரென்ச் கோப்பை, ஆகியவற்றை வென்றுள்ளார். 2014, 2015, 2016 என தொடர்ச்சியாக 3 ஆண்டுகளில் யுரோப்பா கோப்பையை செவில்லா அணியுடன் வென்று சரித்திர சாதனையையும் படைத்திருந்தார். 

ஆர்சீன் வெங்கரின் கீழ், பிரீமியர் லீக் உட்பட பல கோப்பைகளை வென்ற ஆர்சனல், 2005ம் ஆண்டில் இருந்து 2014ம் ஆண்டு வரை ஒரு கோப்பையை கூட வெல்லவில்லை. பல விமர்சனங்களுக்கு பின், 2014, 2015, 2017ம் ஆண்டுகளில் எஃப்.ஏ. கோப்பையை வென்றது. ஆனால், பிரீமியர் லீக் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வந்ததை தொடர்ந்து, ஆர்சீன் வெங்கர் விமர்சனங்களை ஏற்று, அணியில் இருந்து விலகினார். தற்போது, உனாய் எமெரியின் கீழ், பிரீமியர் லீக் தொடரை வெல்ல ஆர்சனல் கடும் முயற்சி எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு சாம்பியன்களான மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்தி தங்களின் ஆதிக்கத்தை உரக்க சொல்ல ஆர்சனல் நிச்சயம் முயற்சிக்கும். 

ஜெர்மன் கோல்கீப்பர் லெனோ, ஜுவென்டஸ் அணியின் லீக்ஸ்டைனர், கிரேக்க வீரர் சாக்ரடீஸ், சமீபத்தில் நடந்த உலகக் கோப்பையில் கலக்கிய உருகுவே வீரர் டோரெய்ரா ஆகியோரை வாங்கியுள்ளது ஆர்சனல். 

ஆட்ட லெவன் (கணிப்பு)

மான்செஸ்டர் சிட்டி: எடர்சன், வாக்கர்,  மெண்டி, லபோர்டே, ஸ்டோன்ஸ், டி ப்ருயின், பெர்னான்டினோ, சில்வா, ஆகுவேரோ, மாஹ்ரஸ், சானே

ஆர்சனல்: லெனோ, மெயிட்லாண்ட், சாக்ரடீஸ், முஸ்டாஃபி, பெல்லரின்,  டோரெய்ரா, ராம்ஸே, லாகாசட், ஓசில், மிக்கடாரியன், ஆபமயாங்க்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP