'பெனால்டி மிஸ்' வேதனையளிக்கிறது: வருந்தும் மெஸ்ஸி

ஐஸ்லாந்துக்கு எதிரான போட்டியில் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை மிஸ் செய்தது மிகுந்த வேதனையளிப்பதாக அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
 | 

'பெனால்டி மிஸ்' வேதனையளிக்கிறது: வருந்தும் மெஸ்ஸி

ஐஸ்லாந்துக்கு எதிரான போட்டியில் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை மிஸ் செய்தது மிகுந்த வேதனையளிப்பதாக அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

21வது உலக கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 16ம் தேதி நடந்த போட்டியில் ஐஸ்லாந்து அணியும் அர்ஜென்டினா அணியும் மோதின. அந்த போட்டிக்கு முந்தைய தினம் தான் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை படைத்திருந்தார். எனவே அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரரும் அந்த அணியின் கேப்டனுமான லயோனல் மெஸ்ஸியும் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

அன்றைய போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்த ஆட்டத்தில் நட்சத்திர வீரரும், அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான லயோனல் மெஸ்ஸி பெனால்டி கிக் வாய்ப்பை கோலாக மாற்றத் தவறினார். 12 அடி தூரத்தில் இருந்து அவர் உதைத்த பந்தை, ஐஸ்லாந்து கோல்கீப்பர் ஹால்டோர்ஸன் வலது புறமாக பாய்ந்து அற்புதமாக தடுத்தார். இதன் பின்னர் கிடைத்த இரு பிரி கிக் வாய்ப்புகளையும் மெஸ்ஸி சரியாக பயன்படுத்தத் தவறினார். இது உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகரல்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. 

'பெனால்டி மிஸ்' வேதனையளிக்கிறது: வருந்தும் மெஸ்ஸி

இதுகுறித்து மெஸ்ஸி கூறும்போது, “பெனால்டி கிக் வாய்ப்பை தவறவிட்டது வேதனையளிக்கிறது. ஏனெனில் அது வெற்றிகரமானதாக அமைந்திருந்தால் முன்னிலையை அடைந்திருப்போம். போட்டியை டிராவில் முடித்தாலும் நம்பிக்கையை நாங்கள் இழக்கவில்லை. இந்த ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற தகுதியானவர்கள் என்றே நினைக்கிறேன். ஐஸ்லாந்தின் டிபன்ஸில் இடைவெளியை கண்டுபிடிக்க முயன்றோம். ஆனால் எங்களால் அது முடியாமல் போனது.

குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்னதாக சில நாட்கள் ஓய்வு உள்ளது. இது சிறப்பான முறையில் தயாராக உதவும். தொடக்க ஆட்டத்தில் ஒரு புள்ளி எடுத்தால் போதும் என நாங்கள் நினைக்கவில்லை. ஆனாலும் இது முதல் ஆட்டம்தான். யாரும் எதையும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். இது உலகக் கோப்பையும் கூட, அனைத்து ஆட்டங்களும் நெருக்கமாகவே இருப்பதை பார்த்தாலே புரியும்” என்றார்.

அர்ஜென்டினா அணி வரும் 21ம்தேதி குரோஷிய அணியை எதிர்ககொள்கிறது. இந்த போட்டி நிஸ்னி நோவ்கொரோட் மைதானத்தில் நடக்கிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP