1. Home
  2. விளையாட்டு

ஸ்பெயின் நாட்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை பெற்றார் மெஸ்ஸி!

ஸ்பெயின் நாட்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை பெற்றார் மெஸ்ஸி!

பார்சிலோனா கால்பந்து க்ளப் அணிக்காக விளையாடி வரும் அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த லியோனல் மெஸ்ஸி, 2017/18 சீசனில் ஸ்பெயின் நாட்டின் சிறந்த கால்பந்து வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அர்ஜென்டினாவை சேர்ந்த லியோனல் மெஸ்ஸி, ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். சர்வதேச அளவில் சிறந்த வீரராக பலரால் மெஸ்ஸி கருதப்படுகிறார். 31 வயதான மெஸ்ஸி, 2017/18 சீசனில் பார்சிலோனா அணிக்காக 54 போட்டிகளில் விளையாடி 45 கோல்களும், 18 முறை மற்ற வீரர்கள் கோல் அடிக்க அசிஸ்ட் செய்து உதவியும் உள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் லீக் தொடரான லா லிகாவில், மெஸ்ஸி 34 கோல்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது. இதுபோக, தனது சக வீரர்கள் கோல் அடிக்க 12 முறை அசிஸிட் கொடுத்து உதவியுள்ளார். இவரது செயல்களால் பார்சிலோனா, ஸ்பெயின் நாட்டின் லீக் தொடரையும், ஸ்பானிஷ் கோப்பையையும் கைப்பற்றியது. இதனால் அவருக்கு கடந்த சீசனில், ஸ்பெயின் நாட்டின் சிறந்த வீரர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like