1. Home
  2. விளையாட்டு

காயம் காரணமாக மெஸ்ஸி நீக்கம்

காயம் காரணமாக மெஸ்ஸி நீக்கம்


உலகக்கோப்பை நெருங்கி வரும் நிலையில் இன்று நடைபெறவுள்ள முக்கியமான நட்பு போட்டியில் ஸ்பெயின் அணியுடன் அர்ஜென்டினா மோதுகிறது. இதில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி காயம் காரணமாக விளையாடவில்லை.

2018 உலகக்கோப்பை ஜூன் மாதம் ரஷ்யாவில் நடைபெறுகிறது. இதில் கோப்பையை வெல்லும் அளவுக்கு பலம் கொண்ட அணிகளாக ஸ்பெயின், ஜெர்மனி, பிரேசில், அர்ஜென்டினா ஆகிய நாடுகள் கருதப்படுகின்றன. இன்று நடைபெறும் நட்பு போட்டிகளில் அர்ஜென்டினா - ஸ்பெயின், ஜெர்மனி - பிரேசில் ஆகிய அணிகள் மோதுவதால், உலகக்கோப்பை அளவுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, உலகின் சிறந்த கால்பந்து வீரராவார். 30 வயதான அவர், க்ளப் போட்டிகளில் பல சாதனைகளை படைத்தாலும், அர்ஜென்டினா அணிக்காக பெரிய அளவில் கோப்பைகளை வெல்லவில்லை. உலகக்கோப்பையை வெல்ல மெஸ்ஸிக்கு இது கடைசி வாய்ப்பாக கருதப்படுகிறது.

இந்நிலையில், புதிய பயிற்சியாளருடன் புத்துணர்ச்சியுடன் விளையாடி வருகிறது அர்ஜென்டினா. சில தினங்களுக்கு முன் நடந்த நட்பு போட்டியில், இத்தாலியை 3-0 என அர்ஜென்டினா வீழ்த்தியது. ஆனால், மெஸ்ஸி இதில் விளையாடவில்லை. இன்று நடைபெறும் போட்டியில் மெஸ்ஸி விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னும் அவரது காயம் குணமாகவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த போட்டியிலும் மெஸ்ஸி விளையாடமாட்டார். இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்த போட்டிக்கு பின், முக்கியமான க்ளப் போட்டிகள் வருவதனால், மெஸ்ஸி விரைவில் குணமடைவாரா என்ற அச்சத்தில் அவரது க்ளப் அணியான பார்சிலோனா ரசிகர்கள் உள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like