மெஸ்ஸி அதிரடி; அரையிறுதிக்கு முன்னேறியது பார்சிலோனா!

ஸ்பானிஷ் கோப்பை கால்பந்து தொடரில், செவில்லாவுக்கும் பார்சிலோனாவுக்கும் இடையே நடைபெற்ற காலிறுதி சுற்றுப் போட்டியில், இக்கட்டான சூழ்நிலை இருந்த பார்சிலோனா 6-1 என அபார வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
 | 

மெஸ்ஸி அதிரடி; அரையிறுதிக்கு முன்னேறியது பார்சிலோனா!

ஸ்பானிஷ் கோப்பை கால்பந்து தொடரில், செவில்லாவுக்கும் பார்சிலோனாவுக்கும் இடையே நடைபெற்ற காலிறுதி சுற்றுப் போட்டியில், இக்கட்டான சூழ்நிலையில் இருந்த பார்சிலோனா 6-1 என அபார வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

பார்சிலோனாவுக்கும் செவில்லா அணிக்கும் இடையே ஸ்பானிஷ் கோப்பை காலிறுதி போட்டி நடைபெற்றது. இரண்டு போட்டிகளாக நடைபெறும் இந்த சுற்றின் முதல் போட்டியில், செவில்லா அணி 2-0 என சூப்பர் வெற்றி பெற்றது. அடுத்த சுற்றுக்கு முன்னேற, குறைந்தபட்சம் 3 கோல்கள் அடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் பார்சிலோனா அணி களமிறங்கியது.

துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி விளையாடியது பார்சிலோனா. 13வது நிமிடத்தில், நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியை செவில்லா வீரர் பவுல் செய்ய, பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. பெனால்டியை மெஸ்ஸி அடிக்காமல், ஃபார்மை இழந்து தவிக்கும் குட்டினோவிடம் வழங்க அவர் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். 30வது நிமிடத்தில், ஆர்தர் கொடுத்த ஒரு சூப்பர் பாஸ், ராக்கிடிச் கால்களில் பட்டு, கோலுக்குள் சென்றது. இரண்டாவது பாதியில், 53வது நிமிடத்தில், குட்டினோ மற்றொரு கோல் அடித்து 3-0 என முன்னிலை கொடுத்தார். அடுத்த நிமிடத்திலேயே பார்சிலோனாவின் மெஸ்ஸி மீண்டும் ஒரு சிறப்பான பாஸ் கொடுக்க, அதை ரொபர்டோ கோலாக்கினார். 4-0 என முன்னிலை பெற்ற நிலையில், பார்சிலோனா அணியின் கோல்கீப்பர் சில்லிசன் செய்த ஒரு தவறால், செவில்லாவின் அரேனா கோல் அடித்தார்.

அதன்பின் செவில்லா தொடர்ந்து கோல் அடிக்க போராடி வந்தது. 89வது நிமிடத்தில், பார்சிலோனாவின் சுவாரஸ் கோல் அடிக்க, 92வது நிமிடத்தில், மொத்த அணியே சேர்ந்து பந்தை கடத்திச்சென்று கோல் அடிக்காமல் இருந்த கேப்டன் மெஸ்ஸியிடம் வழங்கியது. அவர் கூலாக அதை கோலுக்குள் தள்ளி 6-1 என அபார வெற்றியுடன் பார்சிலோனா அரையிறுதிக்கு முன்னேறியது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP