கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் பயிற்சியாளர் டேவிட் ஜேம்ஸ் விலகல்

Davidஐஎஸ்எல் கால்பந்து தொடரில் விளையாடி வரும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் பயிற்சியாளர், இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் ஜேம்ஸ், தொடர் தோல்விகளால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
 | 

கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் பயிற்சியாளர் டேவிட் ஜேம்ஸ் விலகல்

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் விளையாடி வரும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் பயிற்சியாளர், இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் ஜேம்ஸ், தொடர் தோல்விகளால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் மிக முக்கியமான அணிகளுள் ஒன்று கேரளா பிளாஸ்டர்ஸ். கோப்பையை வெல்லா விட்டாலும், தொடர்ந்து நாக் அவுட் சுற்றுகளுக்கு தகுதி பெற்று அதிரடியாக விளையாடி வருவது வழக்கம. இந்த அணிக்கு, கேரளாவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

கடந்த ஜனவரியில் அந்த அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் டேவிட் ஜேம்ஸ் நியமிக்கப்பட்டார். தற்போது தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். இந்த ஐ.எஸ்.எல் தொடரில் 12 போட்டிகளில், ஒரு போட்டியில் மட்டுமே கேரளா பிளாஸ்டர்ஸ் வென்றுள்ளது. சமீபத்தில் மும்பைக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 6-1 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து, தனது பதவியை ஜேம்ஸ் ராஜினாமா செய்துள்ளார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP