பட்டையை கிளப்பிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்... வங்கதேசத்துக்கு 387 டார்கெட்!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றயை ஆட்டத்தில் வங்கதேச அணி வெற்றி பெற 387 ரன்களை இலக்காக, இங்கிலாந்து நிர்ணயித்துள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான போட்டி, கார்டிஃப், சோஃபியா மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
 | 

பட்டையை கிளப்பிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்... வங்கதேசத்துக்கு 387 டார்கெட்!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றயை ஆட்டத்தில் வங்கதேச அணி வெற்றி பெற 387 ரன்களை இலக்காக, இங்கிலாந்து நிர்ணயித்துள்ளது.

ரவுண்ட் -ராபின் சுற்றின் 12 -வது ஆட்டம்,  இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே, கார்டிஃப், சோஃபியா மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

முன்னதாக டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பந்துவீச தீர்மானித்தது.இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இங்கிலாந்தின் ஜேசன் ராய் மற்றும் ஜானி பேரிஸ்டாவ், வங்கதேச வீரர்களின் பந்துவீச்சை பாரபட்சமின்றி, மைதானத்தின் நாலாபுறமும் சிதறவிட்டனர்.

இதனால், 15 ஓவர்களிலேயே அந்த அணி விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்தது. ரன் ரேட்  விகிதம் இதே வேகத்தில் போனால், இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் 350- 400 வரை அடிக்க வாய்ப்புள்ளதாக நாம் கணித்திருந்தோம். அதேபோன்று, அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 386 ரன்களை குவித்தது.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜேசன் ராய் 153 ரன்கள் அடித்து அசத்தினார். அவருக்கு அடுத்ததாக பட்லர் 64 ரன்களும், பேரிஸ்டாவ் 51 ரன்களையும் எடுத்தனர். வங்கதேச அணி தரப்பில் முகமது சைஃபுதீன், மெஹடி ஹசன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP