'தோனி வெளியேற்றப்படாமல் சொந்தமாக வெளியேற வேண்டும்’

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி வெளியேற்றப்படாமல் சொந்தமாக வெளியேற வேண்டும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 | 

'தோனி வெளியேற்றப்படாமல் சொந்தமாக வெளியேற வேண்டும்’

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி வெளியேற்றப்படாமல் சொந்தமாக வெளியேற வேண்டும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு, தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் ஒரு பரபரப்பான விஷயமாக உள்ளது. கடந்த வாரன் தோனி ஓய்வு பெறப்போகிறார் என்ற செய்தி காட்டுத் தீ போல பரவின. உடனே இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், தோனியின் மனைவி சாக்‌ஷி இந்த தகவல் தவறானது என்று விளக்கமளித்தனர். இதனால், தோனியின் ஓய்வைச் சுற்றியுள்ள ஊகங்கள் மட்டுமே வளர்ந்துள்ளன.

இந்த நிலையில், தோனியை தாண்டி இந்தியா பார்க்க வேண்டிய நேரம் இது என்றும், அவர் வெளியே தள்ளப்படாமல் சொந்தமாக வெளியேற வேண்டும் என்றும் தாம் கருதுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும், தோனிக்கு மாற்றாக ரிஷாப் பண்ட், சஞ்சு சாம்சன் ஆகியோர் உள்ளனர் என்றும், தனியார் சேனலில் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

'தோனி வெளியேற்றப்படாமல் சொந்தமாக வெளியேற வேண்டும்’

தோனி 2 மாதங்கள் தனக்கு ஓய்வு வேண்டும் என கேட்டுகொண்டதால், வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா தொடருக்கான அணியில் அவரின் பெயர் இடம்பெறவில்லை. இதையடுத்து, வங்கதேச தொடருக்கான அணியில் தோனியின் பெயர் இடம்பெற்றால், அவரை அணி நிர்வாகம் ஓய்வை பெற வேண்டி நிர்பந்தம் செய்யவில்லை என்று தெரிந்துவிடும். அதில், தோனி ஓரங்கட்டப்பட்டார் என்றால், கவாஸ்கர் கூறியது போல், தோனி தானகாவே வெளியேறிவிடுவதே நல்லது. அது தான் தோனிக்கும் மரியாதை ஆகும்.


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP