தினேஷ் கார்த்திக்கிற்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்துவிட்டோம்: பிசிசிஐ தேர்வுக் குழு

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்துள்ள தேர்வு குழு, அவருக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்துவிட்டாக தெரிவித்துள்ளது.
 | 

இந்திய அணியின் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக், சமீபத்தில் முடிந்த ஆசிய கோப்பை போதொடரில் 33, 31 நாட்அவுட், 1 நாட்அவுட், 44, 37 ரன்கள் அடித்து அசத்தினார். 

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான  இரண்டு போட்டிக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் கிடைக்கவில்லை. அவருக்குப் பதிலாக ரிஷப் பந்த் பேட்ஸ்மேனாக சேர்க்கப்பட்டுள்ளார். ஆசிய கோப்பையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த அவரை அணியில் இருந்து நீக்கியது குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.

அவரை ஏன் அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்று தேர்வுக்குழு தலைவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் கூறுகையில் ‘‘இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடி அனைவரையும் ஈர்த்துள்ளார்.  தினேஷ் கார்த்திக்கிற்கு நாங்கள் சில வாய்ப்புகள் கொடுத்தோம்’’ என்றார்.

தொடர்ந்து ரிஷப் பந்த் சிறப்பாக ஆடும் பட்சத்தில் தினேஷ் கார்த்திக் இனி ஒரு நாள் போட்டியில் இடம் பெறுவது சந்தேகமே. மேலும் இந்த தொடரில் தோனிக்கு ஓய்வு அளிக்கப்படும் என்றே முதலில் கூறப்பட்டது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP