'தோ வந்துட்டோம்ல' பைனலுக்கு...தம்பிங்களா ரெடியா நீங்க?....இளைஞர்களை ஓரம்கட்டிய அனுபவஸ்தர்கள்..!

தங்களின் அனுபவத்தால் இளைஞர்களை கொண்ட டெல்லி அணியை வீழ்த்தி நாளை மும்பையுடன் இறுதிப்போட்டியில் மோதுவுள்ளது ’தல’ தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
 | 

'தோ வந்துட்டோம்ல' பைனலுக்கு...தம்பிங்களா ரெடியா நீங்க?....இளைஞர்களை ஓரம்கட்டிய அனுபவஸ்தர்கள்..!

தங்களின் அனுபவத்தால் இளைஞர்களை கொண்ட டெல்லி அணியை வீழ்த்தி  நாளை மும்பையுடன் இறுதிப்போட்டியில் மோதுவுள்ளது ’தல’ தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற 2-ஆவது தகுதிச் சுற்றுப்போட்டியில் சென்னை - டெல்லி பலப்பரீட்சை நடத்தின. 
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, தவான்  களமிறங்கினர்.

பிரித்வி ஷா (5 ரன்) சாஹர் பந்துவீச்சி எல்பிடபிள்யூ ஆனார். இதையடுத்து, சென்னை அணியின் ஸ்பின்னர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தவான்18, முன்ரோ 27, ஸ்ரேயாஸ் அய்யர் 13 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். ஒரு பக்கம் ரிஷாப் பாண்ட்  அதிரடி காட்டமுடியாமல் நிதானமாக விளையாடினார். 

'தோ வந்துட்டோம்ல' பைனலுக்கு...தம்பிங்களா ரெடியா நீங்க?....இளைஞர்களை ஓரம்கட்டிய அனுபவஸ்தர்கள்..!

அக்ஸர் பட்டேலின் விக்கெட்டை பிராவோவும், ரூதர்போர்டின் விக்கெட்டை ஹர்பஜனும் வீழ்த்தினார். ரூதர்போர்டின் விக்கெட்டை வீழ்த்தியன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டை எடுத்த 4 -ஆவது வீரர் என்ற பெருமையை ஹர்பஜன் பெற்றார். அடித்து ஆட முடியாமல் தவித்து வந்த பண்ட், சாஹர் பந்துவீச்சில் பிரவோவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 18.4 ஓவர்களுக்கு 137-9 என இருந்தது. 

கடைசி ஓவரை வீசிய ஜடேஜாவின் பந்துவீச்சில், போல்ட் ஒரு சிக்ஸ், இஷாந்த் ஷர்மா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடிக்க, 20 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்து, சென்னை அணிக்கு 148 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

அதிகபட்சமாக ரிஷாப் பண்ட் 38, முன்ரோ 27 ரன்கள் அடித்தனர். சென்னை அணி தரப்பில் சாஹர், ஹர்பஜன் சிங், ஜடேஜா, பிராவோ தலா இரு விக்கெட்டுகளையும், இம்ரான் தாஹீர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.
இதையடுத்து, 148 ரன்கள் என்ற இலக்கை நோக்கி, சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டுபிளிசஸ், வாட்சன் களமிறங்கினார்கள்.

ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஏடாகூடமான ரன் - அவுட் ஆகியிருக்கும், ஆனால், டெல்லி வீரர்கள் சொதப்பியதால் அது தவிர்க்கப்பட்டது. இதன் பிறகு டுபிளிசஸ் அதிரடியாக ஆட தொடங்கினார். ஆனால், மறுபுறத்தில் இருந்த வாட்சன் அடிக்க முடியாமல் தவித்து வந்தார். இருப்பினும், சீரான இடைவெளியில் இருவரும் ரன்களை குவித்து வந்தனர். 

நடப்பு ஐபிஎல் தொடரில், பவர் பிளேயில் 30 ரன்கள் கூட எடுக்காமல் சென்னையின் தொடக்க வீரர்கள் விக்கெட்டை இழந்து வருவது தொடர் கதையாகி வந்த நிலையில், அதற்கு முட்டுகட்டை போட்டனர் வாட்சன், டுபிளிசஸ்.

'தோ வந்துட்டோம்ல' பைனலுக்கு...தம்பிங்களா ரெடியா நீங்க?....இளைஞர்களை ஓரம்கட்டிய அனுபவஸ்தர்கள்..!

அருமையாக ஆடி வந்த டுபிளிசஸ் 37 பந்துகளில் அரை சதம் அடித்து, சிறிது நேரத்திலேயே அவுட் ஆனார். வாட்சன், டுபிளிசஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்தது. இதன் பிறகு அதிரடி ஆடியாக வாட்சன் 31 பந்தில் அரைசதம் அடித்து, மிஸ்ரா பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 

'தோ வந்துட்டோம்ல' பைனலுக்கு...தம்பிங்களா ரெடியா நீங்க?....இளைஞர்களை ஓரம்கட்டிய அனுபவஸ்தர்கள்..!

இதன்பிறகு களமிறங்கிய ரெய்னா 11 ரன்னில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ராயுடு மற்றும் தோனி ஆட்டத்தை முடிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தோனி 9 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால், பிராவோ கையால் சென்னை அணி வெற்றி வாகை சூடியது. 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று, சென்னை அணி ஃபைனலுக்கு சென்றது.

பிளே ஆஃப் போட்டியில் வென்றதன் மூலம், ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றி்ல்  8 -ஆவது முறையாக சென்னை அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது. மேலும், இந்த வெற்றி சிஎஸ்கே அணிக்கு ஐபிஎல் தொடரில் 100-ஆவது வெற்றியாகும்.

நாளை ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில், சென்னை அணி மும்பையுடன் பலபரீட்சை நடத்துகிறது.

சரியான நேரத்தில் செம ஃபார்முக்கு சென்னை அணி வந்துள்ளது. முன்னாள் சாம்பியான் அணியான சிஎஸ்கேவையும், அதன் தலைவருமான தோனியையும் மும்பை வீரர்கள் சற்றுபயத்துடனேயே களத்தில் சந்திப்பார்கள். 

'தோ வந்துட்டோம்ல' பைனலுக்கு...தம்பிங்களா ரெடியா நீங்க?....இளைஞர்களை ஓரம்கட்டிய அனுபவஸ்தர்கள்..!

இந்த இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியில் 3 முறை மோதியுள்ளன. இதில் சென்னை ஒரு முறையும், மும்பை இரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

4-ஆவது முறையாக மோதும் இறுதிப்போட்டியில் வென்று 12-ஆவது ஐபிஎல் கோப்பையை வெல்லப்போவது யார்? என்று ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களே எதிர்பார்த்துள்ளனர்.
 

வி .ராமசுந்தரம் 

தொழிலதிபர் மற்றும் கிரிக்கெட் விமர்சகர் 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP