டி20 உலகக்கோப்பை: முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய மகளிர் அணி!

வெஸ்ட் இண்டீசில் நேற்று தொடங்கிய மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முதல் ஆட்டத்திலேயே இந்தியா தனது வெற்றியை பதிவு செய்துள்ளது. முதல் ஆட்டத்தில் நியூசிலாந்துடன் மோதி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
 | 

மகளிருக்கான ஆறாவது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நேற்று தொடங்கியது. வருகிற 24ம் தேதி வரை நடக்கும் இப்போட்டியில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இவரை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.

டி20 உலகக்கோப்பை: முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய மகளிர் அணி!

முதல் போட்டியில், ‘பி’ பிரிவில் உள்ள இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதின. கயானாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய மகளிரணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய அணியில், தொடக்கத்தில்   வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினர். 

இதனைத் தொடர்ந்து, 40 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறிய போது, நான்காவது விக்கெட்க்கு ஜோடி சேர்ந்த ஜெர்மையா ராட்ரீகர்ஸ் மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஜெர்மையா 59 ரன்களில் அவுட்டாக, சிறப்பாக விளையாடிய ஹர்மன் 51 பந்துகளில் 103 ரன்கள் குவித்து அவுட்டானார். இதன்மூலம் டி20 போட்டியில் முதல் சதம் அடித்த இந்திய வீராங்கனை என்ற பெயரை ஹர்மன்பிரீத் பெற்றுள்ளார். 

இறுதியில், மொத்தமுள்ள 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. டி20 உலக கோப்பையில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அடுத்ததாக களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 160 ரன்களே எடுத்தது. இதன் மூலம் இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதையடுத்து இந்திய அணி நாளை நடைபெறும் அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்கிறது. இந்தியா -பாகிஸ்தான்போட்டி என்பதால் சுவாரஸ்யத்திற்கு குறைவு இருக்காது...

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP