1. Home
  2. விளையாட்டு

9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி!

9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி!

மும்பையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில், மும்பை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில், கிறிஸ் லின் களமிறங்கினார்கள். தொடக்கம் முதலே லின் அதிரடியாக ஆடினார். இந்த நிலையில், கில் 9 ரன்னில் ஹர்திக் பாண்ட்யா பாலில் ஆட்டமிழந்தார்.

பின்னர் உத்தப்பா வந்த சிறிது நேரத்திலேயே லின்னும் ஹர்திக் பாண்ட்யா பாலிலேயே அவுட் ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 8.2 ஓவர்களுக்கு 56 என இருந்தது. அடுத்து வந்த கார்த்திக் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம் என அவர் எதிர்பார்த்த நிலையில், மலிங்காவின் பாலில் க்ருணல் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

தோ வந்துட்டார் ரசுல்.... இனி சிக்ஸர், பவுண்டரிகள் பறக்கப் போகுது, ரன் ஏறப்போகுது என நினைத்து முடிக்கையில், கோல்டன் டக் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார் ரசுல். அவரின் விக்கெட்டை அதே ஓவரில் மலிங்கா தூக்கில் மிரளவைத்தார். ஒரு பக்கம் தன்னந்தனியாக தனது விக்கெட்டை இழக்காமல் ஆடி வந்தார் உத்தப்பா. இவரும், ரசுல் போன பிறகு வந்த ரானாவும் ஒரளவுக்கு ஆடி 16 ஓவர்களில் அணி 100 ரன்களை கடக்க உதவினர்.

மும்பை பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சால், கொல்கத்தா அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே அடித்து, மும்பைக்கு வெற்றி இலக்காக 134 ரன்களை கொல்கத்த நிர்ணயித்துள்ளது.

அதிகபட்சமாக லின் 41, உத்தப்பா 40 ரன்கள் அடித்தனர். இந்த போட்டியில் உத்தப்பா 25 டாட் பால்களை சந்தித்து குறிப்பிடத்தக்கது. மும்பை அணி தரப்பில் மலிங்கா 3, ஹர்திக், பும்ரா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

பின்னர் மும்பை அணியின் வீரர்கள் டி-காக், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். டிகாக் 30 ரன்களில் அவுட் ஆனதையடுத்து ரோஹித்துடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த இருவரும் கடைசி வரை ஆட்டம் இழக்கவில்லை. ரோஹித் சர்மா 55 ரன்களுடனும், சூர்யகுமார் 46 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

16.1 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களை எடுத்தனர் மும்பை அணியினர். இதன் மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது.

newstm.in

Trending News

Latest News

You May Like