லிட்டில் மாஸ்டர் ... மாஸ்டர் பிளாஸ்டர்...டெண்டுல்கரின் பிறந்த நாள் இன்று !

எவ்வளவு விராட் கோலிகள், எவ்வளவு ரோஹித் சர்மாக்கள் கிரிக்கெட்டில் வந்தாலும், அத்தனை பேருக்கும் அனேகமாய் "லிட்டில் மாஸ்டர்" சச்சின் தான் முன்னுதாரணம், உத்வேகம் எல்லாம்...
 | 

லிட்டில் மாஸ்டர் ... மாஸ்டர் பிளாஸ்டர்...டெண்டுல்கரின் பிறந்த நாள் இன்று !

கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனான சச்சின் டெண்டுல்கர் இன்று (ஏப். 24) தனது 46 - வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். எவ்வளவு விராட் கோலிகள், எவ்வளவு ரோஹித் சர்மாக்கள் கிரிக்கெட்டில் வந்தாலும், அத்தனை பேருக்கும் அனேகமாய் "லிட்டில் மாஸ்டர்" சச்சின் தான்  முன்னுதாரணம், உத்வேகம் எல்லாம்...

"கிரிக்கெட் ஓர் மதம் என்றால், அங்கு சச்சின் தான் கடவுள்" என சொல்லும் அளவிற்கு உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்தியாவின் "மாஸ்டர் பிளாஸ்டர்" டெண்டுல்கர். அவரை பற்றி, சக அணி வீரர்கள் மற்றும் அவரது சமகாலத்தில் கிரிக்கெட் விளையாடிய பிற நாட்டு வீரர்கள் சிலர் என்ன சொல்லியிருக்கிறார்கள் என, சச்சினின் பிறந்த தினமான இன்று பார்ப்போம் வாருங்கள்...

சச்சின் பேட்டிங் செய்யும்போது, அவர் உருவில் என்னையே நான் பார்க்கிறேன் - டான் பிராட்மேன் ( ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்)

டெஸ்ட் கிரிக்கெட்டிலும்,  சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் நான் தலா 10 ஆயிரம் ரன்களை அடித்துள்ளேன் என்பது என் பேரப்பிள்ளைகளுக்கு நினைவிருக்குமா? இல்லையா? எனத் தெரியாது. ஆனால் அவர்கள், சச்சின் டெண்டுல்கருடன் சகவீரராக இந்திய அணியில் நானும் இருந்தேன் என்பதை மட்டும் மறக்கமாட்டார்கள்  - ராகுல் டிராவிட் (இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேட்பன்)

லிட்டில் மாஸ்டர் ... மாஸ்டர் பிளாஸ்டர்...டெண்டுல்கரின் பிறந்த நாள் இன்று !

ஒரு போட்டியில், எதிரணியினர் டெண்டுல்கரை மட்டும் அவுட் - ஆக்கிவிட்டால், அவர்களின் பாதி வேலை முடிந்துவிட்டதென அர்த்தம் - அர்ஜுனா ரணதுங்கா (இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேட்பன்)

குத்துச்சண்டைக்கு முகம்மது அலி, கூடைப்பந்துக்கு மைக்கேல் ஜோர்டனை போல, கிரிக்கெட்டுக்கு டெண்டுல்கர் - பிரைன் லாரா (மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்)

டெண்டுல்கர் போன்ற வீரர்கள் கிடைப்பது மிக அரிது. அவரது சமகாலத்தில் கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன் என்பதில் பெருமையடைகிறேன்  -  வாசிம் அக்ரம் ( பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் வீரர்)

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP