ஐபிஎல் :டெல்லி அணி படுதோல்வி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி அணி படுதோல்வி அடைந்தது. டெல்லி ஃப்ரோஸா கோட்லா மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
 | 

ஐபிஎல் :டெல்லி அணி படுதோல்வி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி அணி படுதோல்வி அடைந்தது.

இந்தத் தொடரின் 34 -ஆவது போட்டி, டெல்லி ஃப்ரோஸா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

20 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குர்னால் பாண்ட்யா 37* ரன்கள் எடுத்தார். டெல்லி அணி வீரர் ரபாடா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

அடுத்து 169 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் சிகர் தவான், பிரித்வ் ஷா ஆகியோர் நல்ல தொடக்கத்தை அளித்தனர். இருப்பினும், அணியின் ஸ்கோர் 49 ஆக இருந்தபோது தவான் அவுட் ஆனார்.

இதைத்தொடர்ந்து, அணியின் ஸ்கோர் 75யை எட்டுவதற்குள் பிரித்வ் ஷா, கோலின் முன்ரோ, ஸ்ரேயால் ஐயர், ரிஷப் பண்ட் என மிடில் ஆர்டர் பேட்மேஸ்மேன் அடுத்தடுத்து அவுட்டாக 76/5 என்ற இக்கட்டான நிலைக்கு டெல்லி அணி தள்ளப்பட்டது. இறுதியில் அந்த அணி 128 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையடுத்து இப்போட்டியில் மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் ராகுல் சச்ஹார்  3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP