புனே ஒருநாள் போட்டி: 43 ரன்கள் வித்தியாசத்தில் மே.இந்திய தீவுகள் அணி வெற்றி

புனேவில் நேற்று நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை 43 ரன்கள் வித்தியாசத்தல் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது. தற்போது 1-1 என்ற சமநிலையில் இந்த தொடர் உள்ளது.
 | 

புனே ஒருநாள் போட்டி: 43 ரன்கள் வித்தியாசத்தில் மே.இந்திய தீவுகள் அணி வெற்றி

புனேவில் நேற்று நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை 43 ரன்கள் வித்தியாசத்தல் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது. 

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் நேநற்று புனேவில் இரு அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சு தேர்வு செய்தார்.

முதலாவதாக பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள்அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் சேர்த்தது.

இந்திய அணி சார்பில் பும்ரா அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

இதையடுத்து, 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். ரோகித் சர்மா 8 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலி நிதானமாக ஆடினார்.  ஷிகர் தவான் 35 ரன்னிலும், அம்பதி ராயுடு 22 ரன்னிலும், ரிஷப் பந்த் 24 ரன்னிலும் அவுட்டாகினர். தோனி 7 ரன்னில் வெளியேறியதால் இந்தியா நெருக்கடிக்கு ஆளானது.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் விராட் கோலி தனி மனிதனாக போராடினார். அபாரமாக ஆடி சதமடித்த கோலி 107 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இதையடுத்து, இந்தியா 47.4 ஓவரில் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. எனவே மேற்கிந்திய தீவுகள் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

தற்போது இத்தொடரில் 1-1 என்ற இருஅணிகளும் சமநிலையில் உள்ளன. 4வது ஒருநாள் போட்டி நாளை மும்பையில் நடைபெறுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP