உயிரோடு தான் இருக்கிறேன்... வதந்திகளை நம்பாதீர்கள்: நாதன் மெக்கலம் விளக்கம்

தான் இறந்து விட்டதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு விளக்கம் அளித்துள்ளார் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நாதன் மெக்கலம்.
 | 

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நாதன் மெக்கலம் தற்போது பல்வேறு நாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் நாதன் மெக்கலம் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் காலமானார் என்று அவரின் மனைவி அறிவித்து இருக்கிறார் என்ற தகவல் வேகமாக பரவியது. 

இதனால், பலரும் இரங்கல் தெரிவிக்க தொடங்கினர். இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நாதன் விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், "“ நான் உயிரோடுதான் இருக்கிறேன். இதற்கு முன் விளையாடியதைக் காட்டிலும் அதிக வலிமையுடன் விளையாடுவேன். இந்த வதந்தி எங்கிருந்து வெளியானது என்பது தெரியவில்லை. ல வ் யூ ஆல் “ எனப் பதிவிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP