அவர்கள் வந்தால் ஆஸிக்கு உலகக்கோப்பை வெல்ல வாய்ப்பு இருக்கிறது: ஷேன் வார்னே

தடைக்காலம் முடிந்து ஸ்மித்தும் வார்னரும் மீண்டும் அணியில் சேர்ந்தால் ஆஸ்திரேலிய அணிக்கு உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பு இருக்கிறது என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.
 | 

அவர்கள் வந்தால் ஆஸிக்கு உலகக்கோப்பை வெல்ல வாய்ப்பு இருக்கிறது: ஷேன் வார்னே

தடைக்காலம் முடிந்து ஸ்மித்தும் வார்னரும் மீண்டும் அணியில் சேர்ந்தால் ஆஸ்திரேலிய அணிக்கு உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பு இருக்கிறது என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார். 

கடந்தாண்டு மார்ச் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியினர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அந்த அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் சர்வதேச போட்டிகளில் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. 

அதற்கு பிறகு அந்த அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. சமீபத்தில் நடந்த இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்துள்ளது. இதையடுத்து  ஆஸி அணியின் உதவி பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டார். 

இதே போல 2003ம் ஆண்டு ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டு ஷேன் வார்னேவுக்கு ஓராண்டு விளையாட தடைவிதிக்கப்பட்டது. அதனையடுத்து மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இணைந்து அவர் சிறப்பாக விளையாடினார். 

இந்நிலையில் தற்போது தடைவிதிக்கப்பட்டிருக்கும் ஸ்மித் மற்றும் வார்னர் குறித்து ஷேன் வார்னே பேசும் போது, "இது போன்ற காலத்தை கடந்து வரும் போது மிகவும் பிரஷ்ஷாக உணர்வோம். மீண்டும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வந்திருக்கும். கிரிக்கெட் நமக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்திருப்போம். அதற்கு அர்த்தம் நாம் மீண்டும் புத்துணர்ச்சி பெற்றுள்ளோம் என்பதே. 

தற்போது அந்த இரண்டு வீரர்களுக்கு மீண்டும் தங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதனால் உலகக்கோப்பை வெல்லும் வாய்ப்பு ஆஸ்திரேலியாவுக்கு உள்ளது என்று நான் கூறுகிறேன். முதல் சில போட்டிகளில் அவர்கள் தயக்கம் காட்டுவார்கள், ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் அவர்கள் ஆட்டம் சூடுப்பிடிக்கும்" என்றார். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP