1. Home
  2. விளையாட்டு

ஐபிஎல்: ஹைதராபாத் அணிக்கு 160 ரன்கள் வெற்றி இலக்கு

ஐபிஎல்: ஹைதராபாத் அணிக்கு 160 ரன்கள் வெற்றி இலக்கு

ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் ஐபில் போட்டியில், ஹைதராபாத் அணி வெற்றி பெற 160 ரன்கள் இலக்காக கொல்கத்தா அணி நிர்ணயித்துள்ளது.

முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்ஸன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின், சுனில் நைரேன் களமிறங்கினர்.

ஆரம்பத்திலேயே அதிரடியாக ஆடிய நைரேன் (8 பந்தில் 25 ரன்) கலீல் பந்துவீச்சில் போல்ட் ஆனார். இதன் பிறகு, கில் 3, ரானா 11, கார்த்திக் 6 ரன்கள் என்று வெளியேற, ரிங்கு சிங், லின் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

நன்றாக ஆடிக்கொண்டிருந்த ரிங்கு சிங் சந்தீப் சர்மா பந்துவீச்சில் ரஷித் கானிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இவரைதொடர்ந்து. லின்னும் வெளியேற, எதிர்பார்க்கப்பட்ட ரசுல் 2 சிக்ஸர் மட்டும் விளாசி ஏமாற்றம் அளித்தார்.

20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் அடித்து, ஹைதராபாத் அணிக்கு வெற்றி இலக்காக 160 ரன்களை நிர்ணயித்துள்ளது.

அதிகபட்சமாக லின் 51, ரிங்கு சிங் 30 ரன்கள் அடித்தனர். ஹைதராபாத் அணி தரப்பில் கலீல் அகமது 3, புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like