"கோலியிடம் இருந்து கத்துக்கோங்கப்பா!" - ஆஸ்திரேலிய பயிற்சியாளர் பாராட்டு மழை

3வது டெஸ்டில் ஆஸ்திரேலியா மிகமோசமாக பேட்டிங் செய்து தோல்வியின் விளிம்பில் உள்ள நிலையில், இந்திய கேப்டன் விராட் கோலியிடமிருந்து தனது அணி கற்றுக்கொள்ள வேண்டும், என ஆஸ்திரேலிய பயிற்சியாளர் கிரேம் ஹிக் தெரிவித்துள்ளார்.
 | 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 443 ரன்கள் எடுத்த நிலையில், ஆஸ்திரேலியா 151 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வெறும் 66.5 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய வீரர்கள், இந்தியா வீரர் பும்ராவின் வேகப்பந்துவீச்சில் மளமளவென சரிந்தனர். மூன்று போட்டிகளிலுமே இதுவரை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பெரிதாக சோபிக்கவில்லை. இந்த நிலையில், ஆஸ்திரேலிய பயிற்சியாளர் கிரேம் ஹிக், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இந்திய கேப்டன் கோலி போல போட்டியை புரிந்துகொண்டு விளையாடி யிருக்க வேண்டும், என கூறினார்.

இதுகுறித்து அவர், "கோலி எப்படி விளையாடினார் என்பது பற்றி நாங்கள் பேசினோம். அதிரடியான பேட்ஸ்மேனான கோலி, 20 ரன்களை கடக்க எப்படி 25,26 பந்துகள் எடுத்துக் கொண்டார். அதற்குப்பின் நிதானமாக விளையாடி ரன்கள் குவித்ததை அனைவரும் பார்த்தோம். என்னை பொருத்தவரை, உலகின் சிறந்த வீரர் இதுபோல போட்டிக்கேற்றவாறு தனது பேட்டிங்கை மாற்றி விளையாடவேண்டும்.

அதே ஆட்டக்களத்தில் இருந்துகொண்டு கோலி போன்ற ஒருவரை பார்த்து, அவரிடம் இருந்து கற்றுக் கொள்ளவில்லை என்றால், தவறான இடத்தில் இருக்கிறாரகள் என்று அர்த்தம். எங்கள் வீரர்கள் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. அவரிடம் நிறைய கட்டுப்பாடு, பொறுமை அவற்றுக்கு மேலாக ஒரு வெறி உள்ளது" என்று கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP