1. Home
  2. விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு உதவினாரா நடுவர்? கோலி கோபம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு உதவினாரா நடுவர்? கோலி கோபம்

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்திக் பாண்ட்யா நேற்றைய போட்டியில் 'அவுட்' என்று தெளிவாக தெரிந்தும் நடுவர் 'நாட் அவுட்' கொடுத்ததால் கோலி நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்ர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 19வது ஓவரை கிரிஸ் வோக்‌ஸ் வீசினார். முதல் பந்தில் பொல்லார்ட் தனது விக்கெட்டை இழந்தார். அடுத்த பந்தில் ஹர்திக் பாண்ட்யா களமிறங்கினார். அவருக்கு வீசப்பட்டு பந்து பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது. அதை விக்கெட் என களத்தில் இருந்த நடுவர் அறிவித்தார். பின்னர் மும்பை அணி ரிவியூவ் கேட்டனர். அதன் பின் 3வது நடுவர் அதனை நாட் அவுட் என்று அறிவித்தார். ஆனால் பெரிய திரையில் பேட்டில் பந்து தொட்டு செல்வது தெளிவாக தெரிந்தது. நடுவரின் இந்த முடிவை கேட்டு கிரிஸ் வோக்சும், பெங்களூரு அணியின் கேப்டன் கோலியும் அதிர்ச்சியடைந்தனர்.

சாதாரணமாகவே களத்தில் ஆக்ரோஷமாக இருக்கும் கோலிக்கு இது கோபத்தை ஏற்படுத்த அவர் நடுவர்களிடம் சென்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். ஆனால் நடுவர்களின் முடிவே இறுதியானது என்று தெரிவித்து பிரச்னை தீர்க்கப்பட்டது. மிகுந்த ஏமாற்றத்துடன் கோலி சென்றார். அதன் பின் பாண்ட்யா 5 பந்துகளில் 2 சிக்சர்கள், ஒரு பவுண்டரி அடித்து 17 ரன்கள் எடுத்தார்.

ஐபிஎல் ரசிகர்கள் இந்த சம்பவத்திற்கு பிறகு நடுவர் வேண்டுமென்றே மும்பை அணிக்கு உதவி உள்ளார் என்று ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர். மேலும் இது முன்னரே பேசி வைத்து நடப்பது போல உள்ளதாகவும் சிலர் தெரிவித்துள்ளர்.

newstm.in

Trending News

Latest News

You May Like