1. Home
  2. விளையாட்டு

டிராவிட்டை பின்னுக்குத்தள்ளி இரண்டாமிடம் பிடித்த தோனி! எதில் தெரியுமா?

டிராவிட்டை பின்னுக்குத்தள்ளி இரண்டாமிடம் பிடித்த தோனி! எதில் தெரியுமா?

ஆசியக்கோப்பை தொடரின் நேற்றைய போட்டியின் மூலம் இந்தியாவிற்காக அதிக போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீரர் எனும் பெருமையை மகேந்திர சிங் தோனி பெற்றுள்ளார்.

துபாயில் நடைபெறும் 14வது ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் நேற்று இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தொடக்க ஆட்டக்காரர்கள் தவான் மற்றும் ரோஹித் ஷர்மா இணைந்து 210 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோஹித் ஷர்மா சதமடித்ததுடன், ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 7,000 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த போட்டியின் மூலம் மகேந்திர சிங் தோனி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்தியாவிற்காக டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 என மூன்று விதமான போட்டிகளையும் சேர்த்து, அதிக போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீரர் எனும் பெருமையை பெற்றுள்ளார். தோனி இதுவரை 322 ஒரு நாள் போட்டிகள், 90 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 93 டி20 போட்டிகள் என மொத்தம் 505 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

முன்னதாக ராகுல் டிராவிட் 504 போட்டிகளுடன் இரண்டாமிடத்தில் இருந்தார். தற்போது தோனி அவரை பின்னுக்குத்தள்ளி இரண்டாமிடம் பெற்றுள்ளார்.

இந்த பட்டியலில் 664 போட்டிகளில் விளையாடி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like