முதல் டெஸ்ட் விளையாடிய நாள்: சச்சின் நெகிழ்ச்சி ட்வீட்

1989ல் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இன்றைய தினம் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியதன் நினைவாக நெகிழ்ச்சியாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.
 | 

முதல் டெஸ்ட் விளையாடிய நாள்: சச்சின் நெகிழ்ச்சி ட்வீட்

1989ல் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இன்றைய தினம் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியதன் நினைவாக நெகிழ்ச்சியாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

கிரிக்கெட்டின் கடவுளாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் 1989ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிற்காக அறிமுகமானார். அந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடியது. அப்போது சச்சின் டெண்டுல்கருக்கு 16 வயது. 

மிக இளம் வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான வீரர் என்ற பெருமைக்கு இன்றும் அவர் சொந்தக்காரராக இருக்கிறார். கராச்சியில் நடந்த அந்த போட்டியில் தலை சிறந்த பந்துவீச்சாளர்களான இம்ரான் கான், வசிம் அக்ரம், வாகர் யூனிஸ் ஆகியோர் எதிர்கொண்டார். அதில் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சச்சின் விக்கெட் பறிபோனது. இந்த போட்டி டிராவில் முடிந்தது. 

தனது முதல் டெஸ்ட் போட்டிக்கு 24 ஆண்டுகளுக்கு பிறகு சச்சின் 2013 நவம்பர் 15ம் தேதி தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடினார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான அந்த போட்டியில் அவர் 74 ரன்கள் எடுத்தார். 

தனது முதல் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்த நாளை நினைவு கூர்ந்து சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

 

 

அதில், "ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் பல நினைவுகளை கொண்டு வருகிறது. 24 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடியது பெருமையாக இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP