ரசிகர்களை ஆசைக்காட்டி ஏமாற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யுவராஜ் சிங்கை ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் கடைசியில் ஏமாற்றத்தையே அடைந்ததாக சமூக வலைதளங்களில் வருத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர்.
 | 

ரசிகர்களை ஆசைக்காட்டி ஏமாற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, யுவராஜ் சிங்கை ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் கடைசியில் ஏமாற்றத்தையே அடைந்ததாக சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

2019ம் ஆண்டு நடக்க்விருக்கும் ஐபிஎல் தொடருக்கான ஏலம் நேற்று ஜெய்பூரில் நடந்தது. இந்தாண்டு ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யுவராஜ் சிங்கை ஏலத்தில் எடுக்கும் என்று சில தகவல்கள் ஓரிரு மாதங்களுக்கு முன்பே வெளியானது.  அதனால் பெரும் எதிர்பார்ப்போடு சென்னை ரசிகர்கள் இருந்தனர். 

இந்நிலையில் நேற்று ஏலம் தொடங்கிய உடள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தளபதி படத்தில் இருந்து காட்டுக்குயிலு பாடல் பதிவிடப்பட்டு இருந்தது. மேலும் அந்த பதிவில் 'யூ' 'வி' என்ற வார்த்தைகளை ஆங்கிலத்தில் இருந்தது. யுவராஜ் சிங்கும், தோனியும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் அவர்களை குறிப்பிட்டு தான் இந்த பதிவு என்று ரசிகர்கள் நம்பினர். 

ஆனால் நேற்று சென்னை அணி உட்பட யாரும் யுவராஜ் சிங்கை ஏலத்தில் கேட்கவில்லை. கடைசியில் மும்பை இந்தியன்ஸ் அணி யுவராஜ் சிங்கை அவரது அடிப்படை விலைக்கே வாங்கியது. 

 

 

மூத்த வீரர்களை  அதிகம் கொண்ட சென்னை அணியில் யுவராஜும் சேர்ந்து கலக்குவார் என்று எதிர்பார்த்திருந்தவர்கள ஏமாற்றம் அடைந்தனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP