பவுலர்கள் பெர்பார்மன்ஸ் சூப்பர்: அஷ்வின் பாராட்டு

இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், அசத்தலாக பந்துவீசி 3 விக்கெட் எடுத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின், பந்துவீச்சாளர்களை வெகுவாக பாராட்டினார்.
 | 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக புஜாரா 123 ரன்கள் விளாசினார். 

இரண்டாவது நாளான இன்று களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் மளமளவென வீழ்ந்தனர். முதல் ஓவரிலேயே இஷாந்த் ஷர்மா துவக்க வீரர் பின்ச்சின் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து பந்துவீசிய அஷ்வின், ஹேரிஸ், க்வாஜா, மற்றும் மார்ஷ் ஆகியோர் விக்கெட்களை அடுத்தடுத்து வீழ்த்தி, ஆஸ்திரேலியாவை திணறடித்தார். இஷாந்த் ஷர்மா மேலும் ஒரு விக்கெட் எடுக்க, பும்ரா 2 விக்கெட்களை வீழ்த்தினார். 7 விக்கெட்கள் இழந்து 191 ரன்கள் எடுத்துள்ளது ஆஸ்திரேலியா. 

ஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்த அஷ்வின், இன்றைய ஆட்டம் குறித்து பேசியபோது, "நாங்கள் வேகப்பந்து சுழற்பந்து என தனித் தனியே பேசுவதில்லை. ஒன்று இல்லாமல் இன்றொன்று இல்லை. ஒரு அணியாக சேர்ந்து ஒன்றாக விளையாடுவோம். இன்று மிக சிறப்பாக எங்கள் பந்துவீச்சு அமைந்தது. 

மிடில் ஆடர் சொதப்பினாலும், டிராவிஸ் ஹெட் 61 ரன்களுடன் களத்தில் உள்ளார். நாளை எந்த அணி சிறப்பான துவக்கம் பெறுகிறதோ அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என அஷ்வின் கூறினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP