இந்திய கிரிக்கெட் படைக்கு ஆஸ்திரேலிய பிரதமர் விருந்து!

ஆங்கில புத்தாண்டையொட்டி,இந்திய கிரிக்கெட் அணியினருக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் விருந்தளித்து கௌரவித்தார். சிட்டி நகரில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இன்று இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 | 

இந்திய கிரிக்கெட் படைக்கு ஆஸ்திரேலிய பிரதமர் விருந்து!

ஆங்கில புத்தாண்டையொட்டி, இந்திய கிரிக்கெட் அணியினருக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் விருந்தளித்து கௌரவித்தார். சிட்டி நகரில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலை இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும், டிம் பெய்னி தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வீரர்களும் பங்கேற்றனர். பின்னர் இரு அணி வீரர்களும் பிரதமருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்தியா -ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி, நாளை மறுநாள் சிட்டி நகரில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP