2வது டெஸ்ட்: சேஸ் - ஹோல்டர் ஜோடியால் மீண்டது மேற்கிந்திய தீவுகள்

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி, முதல் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்துள்ளது.
 | 

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது மற்றும் கடைசி போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர்கள் பிராத்வைட்(14) மற்றும் பவல்(22) இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் சிறப்பான பவுலிங்கால் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். தொடர்ந்து வந்த வீரர்களில் ஷாய் ஹோப் மட்டும் 36 ரன்கள் அடித்தார்.

113/5 என்ற மோசமான நிலையில் இருந்த மேற்கிந்திய தீவுகளை, ரோஸ்டன் சேஸ்  மற்றும் கேப்டன் ஜேசன் ஹோல்டர் ஜோடி மீட்டது. 98 ரன்களை சேஸ் விளாச, ஹோல்டரும்(52) அரைசதம் அடித்து அவுட்டானார். முதல் நாள் ஆட்ட முடிவில், 7 விக்கெட் இழந்து 295 ரன்கள் எடுத்துள்ளது மேற்கிந்திய தீவுகள். சதமடிக்க காத்திருக்கும் சேஸ்(98) மற்றும் பிஷூ(2) களத்தில் உள்ளனர்.

இந்திய தரப்பில் உமேஷ் யாதவ் மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP