டேபிள் டென்னிஸ் போட்டி: வீரர், வீராங்கனைகள் அபாரம்!

திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் வீரர், வீராங்கணைகள் அபாரமாக விளையாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.
 | 

டேபிள் டென்னிஸ் போட்டி: வீரர், வீராங்கனைகள் அபாரம்!

திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் வீரர், வீராங்கனைகள் அபாரமாக விளையாடி பார்வையாளர்களை கவர்ந்தனர்.

திருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ் கழகம் சார்பில் தனியார் பள்ளியின் உள்விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் நேற்று தொடங்கி நடைபெற்று வந்தன. 

ஆண்கள், பெண்களுக்கென ஆட்டத்தில் மினிகேடட், கேடட் மற்றும் சப்ஜுனியர், ஜுனியர், யூத், ஆடவர் மற்றும் மகளிர், பதக்கமில்லாத ஓப்பன் பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட போட்டிகளில் மாவட்டத்தில் பல பகுதிகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இப்போட்டியில் பங்கேற்று விளையாடினர்.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியே ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரிஹரசுதன் 3 -2 என்ற செட்களில் முரளி மனோகரை வீழ்த்தினார்.

பெண்கள் பிரிவில், ஆர்ச்சர்டு பள்ளியின் நேத்தா, காவேரி பள்ளி தகிதாவை 3 -0 என்ற நேர்செட்டில் வீழ்த்தி வெற்றி பெற்றார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெங்கடேஷ் - முரளிமனோகர் ஜோடியானது, தொட்டியம் குணசீலன் - அந்தோணி ஜோடியை வீழ்த்தியது. வெற்றிபெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP