பி.வி.சிந்துவுக்கு ரூ. 10 லட்சம் பரிசு அறிவிப்பு!

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு ரூ.10 லட்சம் பரிசு தொகை வழங்கவுள்ளதாக கேரள ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.
 | 

பி.வி.சிந்துவுக்கு ரூ. 10 லட்சம் பரிசு  அறிவிப்பு!

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு ரூ.10 லட்சம் பரிசு தொகை வழங்கவுள்ளதாக கேரள ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. 

கடந்த ஆகஸ்ட் மாதம் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இறுதி சுற்றுக்கு முன்னேறிய பி.வி.சிந்து,  ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை வீழ்த்தி தங்கம் வென்றார். இதன் மூலம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இவருக்கு பலரும் பாராட்டுகளையும், பரிசுகளையும் வழங்கி வருகின்றனர். 

இந்நிலையில், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என கேரள ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP