உலக சாம்பியன்ஷிப் அரையிறுதி போட்டியில் பிவி சிந்து

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார் பிவி சிந்து.
 | 

உலக சாம்பியன்ஷிப் அரையிறுதி போட்டியில் பிவி சிந்து

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார் பிவி சிந்து. 

சீனாவின் நஞ்சிங்கில் நடைபெற்று வரும் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின், காலிறுதியில் இந்தியாவின் பிவி சிந்து - ஜப்பானின் நோஸ்ஓமி ஒகுஹாரா மோதினர். இதில் ஒகுஹாராவை 21-17, 21-19 என்ற நேர்செட் கணக்கில் சிந்து வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறினார். அடுத்த சுற்றில் சிந்து, ஜப்பானின் யகனே யமாகுச்சியை எதிர்கொள்கிறார். 

கலப்பு இரட்டையர் பிரிவில், அஷ்வினி பொன்னப்பா - சாத்விக் சாய்ராஜ் - ராங்கி ரெட்டி இணை தோல்வி கண்டு வெளியேறியது. 

ஆடவர் ஒற்றையர் பிரிவில், சாய் பிரனீத்தை 21-12, 21-12 என்ற கணக்கில் கென்டோ மோமோடாவை வென்றார். 

சாய்னா நேவால், 6-21, 11-21 என்ற கணக்கில் கரோலினா மரினால் வீழ்த்தப்பட்டார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP