சீனா ஓபன் காலிறுதியில் பிவி சிந்து, ஸ்ரீகாந்த் கிடாம்பி

சீனா ஓபன் பேட்மின்டன் காலிறுதிப் போட்டிக்கு பிவி சிந்து, ஸ்ரீகாந்த் கிடாம்பி முன்னேறியுள்ளனர். காலிறுதியில் சிந்து, 5ம் இடம் வகிக்கும் சீனாவின் சென் யுபியை எதிர்கொள்கிறார். கென்டா மோமோடாவுடன் மோதுகிறார் ஸ்ரீகாந்த்.
 | 

சீனா ஓபன் காலிறுதியில் பிவி சிந்து, ஸ்ரீகாந்த் கிடாம்பி

சீனா ஓபன் பேட்மின்டன் காலிறுதிப் போட்டிக்கு பிவி சிந்து, ஸ்ரீகாந்த் கிடாம்பி முன்னேறியுள்ளனர். 

சாங்சவ் நகரில் சீனா ஓபன் பேட்மின்டன் தொடர் நடைபெற்று வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவில் 3ம் இடம் வகிக்கும் பிவி சிந்து, தாய்லாந்தின் பூசனன் ஒக்பாம்ருங்பனுடன் மோதினார். ஒரு மணி 9 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சிந்து 21-23, 21-13, 21-18 என்ற நேர்செட் கணக்கில் ஒக்பாம்ருங்பனை தோற்கடித்தார். காலிறுதியில் சிந்து, 5ம் இடம் வகிக்கும் சீனாவின் சென் யுபியை எதிர்கொள்கிறார். 

ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் கிடாம்பி, 63 நிமிடங்களில் 21-12, 15-21, 24-22 என தாய்லாந்தின் பிப் சுபான்யுவை வீழ்த்தினார். காலிறுதியில் ஜப்பான் ஓபன் சாம்பியனான கென்டா மோமோடாவுடன் மோதுகிறார் ஸ்ரீகாந்த். 

ஆடவர் இரட்டையர் பிரிவில் மனு அத்ரி - சுமித் ரெட்டி மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் - அஷ்வினி பொன்னப்பா இணை, 2-வது சுற்றில் தோல்வி அடைந்து, தொடரில் இருந்து வெளியேறியது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP