சீன ஓபன் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் வெற்றி; பிரணாய் நாக் அவுட்!

சீன ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மற்றொரு இந்திய வீரரான பிரணாய், தோல்வியடைந்து நாக் அவுட் செய்யப்பட்டார்.
 | 

உலகின் 5ம் நிலை வீரரான ஸ்ரீகாந்த், பிரென்ச் வீரர் லூகாஸ் கோர்வே-யை, 21-12, 21-16 என நேர் செட் கணக்கில் வீழ்த்தினார். முழு ஆதிக்கம் செலுத்தி விளையாடிய ஸ்ரீகாந்த், வெறும் 35 நிமிடங்களிலேயே வெற்றி பெற்றார். அடுத்து காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் ஆப் 16 சுற்றில் அவர் விளையாடுவார். 

ஆடவருக்கான மற்றொரு போட்டியில், இந்திய வீரர் பிரணாய், இந்தோனேசியாவை சேர்ந்த ஏசியன் கேம்ஸ் சாம்பியன் ஜோனாதன் கிறிஸ்டியுடன் மோதினார். இந்த போட்டியில், 11-21, 14-21 என்ற செட் கணக்கில், பிரணாய் படுதோல்வி அடைந்தார். 

பெண்களுக்கான ஒற்றையர் போட்டியில், இந்திய வீராங்கனை வைஷ்ணவி ரெட்டி ஜக்கா, தாய்லாந்து வீராங்கனை போர்ன்பவி சொச்சுவாங்கிடம் தோல்வியடைந்தார். கலப்பு இரட்டையர் பிரிவிலும், இந்திய ஜோடி சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி - அஷ்வினி பொன்னப்பா ஜோடி, மலேசியாவை சேர்ந்த சான் பெங் சூன், கோ லியு யிங் ஜோடியிடம் தோல்வியடைய்ந்தனர்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP