பேட்மின்டன் சாம்பியன்ஷிப்: வெளியேறினார் சாய்னா நேவால்

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் காலிறுதி போட்டியில், தோல்வி கண்டு வெளியேறினார் சாய்னா நேவால்.
 | 

பேட்மின்டன் சாம்பியன்ஷிப்: வெளியேறினார் சாய்னா நேவால்

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் காலிறுதி போட்டியில், தோல்வி கண்டு வெளியேறினார் சாய்னா நேவால்.

சீனாவின் நஞ்சிங்கில் நடைபெற்று வரும் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதிச் சுற்றில் இன்று, சாய்னா நேவால் - கரோலினா மாரின் மோதினர். 10-வது இடத்தில் இருக்கும் சாய்னா 6-21, 11-21 என்ற கணக்கில் 7ம் இடம் வகிக்கும் மரினிடம், 31 நிமிடத்தில் வீழ்ந்தார். 

அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் மரின், அந்த ஆட்டத்தில் 6ம் இடம் வகிக்கும் சீனாவின் ஹி பிங்ஜியாவுடன் மோதுகிறார். 

ஸ்ரீகாந்த் கிடாம்பிக்கு பின், சாய்னா நேவாலும் தொடரில் இருந்து வெளியேறினார். இதனால் இத்தொடரில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை, சிந்து, பிரனீத், சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி- அஷ்வினி பொன்னப்பா ஆகியோரில் யார் தக்கவைத்துக் கொள்ள இருக்கின்றனர் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP