ஏசியன் கேம்ஸ்: ஸ்ரீகாந்த் கிடாம்பி வெளியேற்றம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து இந்திய பேட்மின்டன் வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெளியேறினார்.
 | 

ஏசியன் கேம்ஸ்: ஸ்ரீகாந்த் கிடாம்பி வெளியேற்றம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து இந்திய பேட்மின்டன் வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெளியேறினார். 

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற ஆடவர் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்று ஆட்டத்தில், முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஸ்ரீகாந்த், 28ம் இடம் வகிக்கும் ஹாங்காங்கின் வோங் விங் கியை எதிர்கொண்டார். 43 நிமிடங்கள் நடந்த இப்போட்டியில், ஸ்ரீகாந்த் 21-23, 19-21 என்ற கணக்கில் கியிடம் வீழ்ந்தார். 

8-வது இடத்தில் இருக்கும் ஸ்ரீகாந்த், ஆடவர் குழு பிரிவு போட்டியிலும் இந்தோனேசியாவின் அந்தோனியிடம் தோல்வி கண்டார். 

கடந்த ஆண்டு தொடர்ந்து நான்கு டைட்டில்களை கைப்பற்றிய ஸ்ரீகாந்த், அடுத்ததாக செப்டம்பர் 11 முதல் 16 வரை நடைபெற இருக்கும் ஜப்பான் ஓபன் போட்டியில் பங்கேற்க இருக்கிறார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP