ஆசிய போட்டி: ஜப்பானிடம் தோல்வி அடைந்து இந்திய பேட்மின்டன் குழு வெளியேற்றம்

ஆசிய பேட்மின்டன் மகளிர் குழு போட்டியில் இருந்து இந்தியா வெளியேறியுள்ளது.
 | 

ஆசிய போட்டி: ஜப்பானிடம் தோல்வி அடைந்து இந்திய பேட்மின்டன் குழு வெளியேற்றம்

ஆசிய பேட்மின்டன் மகளிர் குழு போட்டியில் இருந்து இந்தியா வெளியேறியுள்ளது.

இந்தோனேசியாவில் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், இன்று நடந்த மகளிருக்கான பேட்மின்டன் குழு காலிறுதிப் போட்டியில் இந்தியா - ஜப்பான் அணிகள் மோதின.  

முதலில் நடந்த ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், பிவி சிந்து 21-18, 21-19 என்ற நேர்செட் கணக்கில் ஜப்பானின் யகனே யமகுச்சியை 41 நிமிடத்தில் வென்றார். இதனால் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. இதற்கு பிறகு நடைபெற்ற இரட்டையர் பிரிவில், சிக்கி ரெட்டி- ஆரத்தி சாரா ஜோடி ஜப்பான் இணையிடம் 15-21, 6-21 என தோல்வி அடைந்தது. 

தொடர்ந்து நடந்த மற்றொரு ஒற்றையர் பிரிவில், சாய்னா நேவால் ஏமாற்றம் அளித்தார். கடுமையாக போராடிய அவர் நஸோமி ஒகுஹராவிடம் தோல்வி அடைந்தார். இதனால் ஜப்பான் 2-1 என முன்னனிலை வகித்தது.

கடைசியாக இரட்டையர் ஆட்டத்தில் அஷ்வினி பொன்னப்பா - பிவி சிந்து கூட்டணி, மத்சுடோமோ- ரகாஷாஷி இணையிடம் 13-21, 12-21 என்ற நேர்செட்களில் தோல்வி அடைந்தது. இதன் காரணமாக 3-1 என்ற புள்ளி கணக்கில் இந்தியா, குழு பிரிவில் தோல்வி கண்டு வெளியேறியது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP