3வது டி20 கிரிக்கெட் போட்டி: தெ.ஆ-க்கு 135 ரன்கள் இலக்கு!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களை எடுத்துள்ளது.
 | 

3வது டி20 கிரிக்கெட் போட்டி: தெ.ஆ-க்கு 135 ரன்கள் இலக்கு!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களை எடுத்துள்ளது. 

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது . தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா களம் இறங்கினர். ரோகித் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழக்க, விராட்கோலி தவானுடன் இணைந்தார். அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களிலே ஆட்டமிழந்தனர். 

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்துள்ளது.  தென்னாப்பிரிக்காவுக்கு 135 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக ஷிகர் தவான் 25 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலிய வீரர்களை பொறுத்தவரையில் அதிகபட்சமாக ரபாடா 3 விக்கெட்டுகளையும், ஹென்ரிக்ஸ், போர்டின் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP