ஹாக்கி உலகக்கோப்பை - ஜெர்மனி சாம்பியன்!!
உலக கோப்பை ஹாக்கி தொடரில் ஜெர்மனி 3ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.
இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெல்ஜியம் – ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் பெல்ஜியம் அணி முதலில் 2 கோல்களை பதிவு செய்தது. இரண்டு கோல்களும் ஒரு நிமிடத்தில் அடுத்தடுத்து அடிக்கப்பட்டன.
முதல் பாதி நிறைவு பெரும் தருவாயில் ஜெர்மனி முதல் கோலை அடித்தது. இதனையடுத்து முதல் பாதியை ஜெர்மனி ஒரு கோலுடனும், பெல்ஜியம் 2 கோல்களுடனும் நிறைவு செய்தன. மூன்றாவது கால் பகுதியில் ஜெர்மனி மேலும் ஒரு கோல் அடித்தது. இதனையடுத்து இரு அணிகளும் சமம் அடைந்தன.

அதன்பிறகு ஜெர்மனி ஒரு கோல் அடிக்க, பின்னர் பெல்ஜியமும் ஒரு கோல் அடித்து ஆட்ட நேர முடிவும் இரு அணிகளும் 3 -3 என சம எண்ணிக்கையில் இருந்தன. எனவே பெனால்டி ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
அதில், ஜெர்மனி 5 கோல்களையும் அடித்த நிலையில், பெல்ஜியம் 4 கோல்கள் மட்டுமே அடித்தது. இதனையடுத்து ஜெர்மனி 2023 உலகக்கோப்பை ஹாக்கியில் ஜெர்மனி சாம்பியன் பட்டம் வென்றது.
newstm.in